Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 டிசம்பர், 2019

முற்றிய காய்கறிகளை தூக்கி எறியாமல் இதை செஞ்சு பாருங்க...!!

 Image result for சமையல் டிப்ஸ்..!!
சப்பாத்தி சுவையாக வர வேண்டுமா?
  வெள்ளரிக்காயைத் தோல் சீவி துருவி, அரை கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கோதுமை மாவு 3 கப் சேர்த்துக் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வையுங்கள். சப்பாத்தி தயார் செய்ய துவங்கும்போது தேவையான உப்பு சேர்த்து பிசைந்தால் சுவை அருமையாக இருக்கும்.

ஊறுகாயிலுள்ள காய்கள் தீர்ந்து, வெறும் விழுது மட்டும் இருக்கிறதா?
  ஒரு பாத்திரத்தில் நான்கைந்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு அதில் இரண்டு, மூன்று ஸ்பூன் ஊறுகாய் விழுதைக் கலந்து வைத்துக்கொண்டால் தயிர் சாதத்துக்கும், ஃப்ரைடு ரைஸ்க்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.

வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா?
 அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்துக்கொண்டு அதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் கார்லிக் பிரெட் தயார்.

மொறுமொறு அடை வேண்டுமா?
 அடை மாவை எண்ணெய் தடவிய கல்லில் வட்டமாக ஊற்றி, மாவில் சிறு சிறு துளைகள் போட வேண்டும். இப்போது அந்த துளைகளில் எல்லாம் சொட்டு சொட்டாக எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேகவிடுங்கள். அடைகள் மொறுமொறுவென இருப்பதுடன், தோசைக்கல்லும் பிசுக்கு பிடிக்காமல் இருக்கும்.

ஸ்நாக்ஸ் டப்பாவில் ஆப்பிள் போட்டு கொடுத்தனுப்புகிறீர்களா?
  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, பழத்தை துண்டுகளாக நறுக்கியதும் சர்க்கரை நீரில் முக்கி, தண்ணீரை உதறிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால், சுவை கூடுதலாக இருப்பதோடு, பழங்களின் நிறம் மாறாமலும் இருக்கும்.
 காய்கறிகளில் முற்றல் எதுவும் இருந்தால், தூக்கி எறிய வேண்டாம். அப்படியே ஃப்ரிட்ஜில் சேமித்து வையுங்கள். சூப், சாம்பார், குருமா போன்றவை தயாரிக்கும்போது. முதலில் இந்தக் காய்களை சிறுதுண்டுகளாக நறுக்கி, பத்து நிமிடங்கள் வேக வையுங்கள். அந்தத் தண்ணீரை மட்டும் ஈர்த்து, மேற்சொன்ன உணவு வகைகளைத் தயாரிக்கும்போது சேர்த்துவிட்டால், கூடுதல் சத்து கிடைக்கும்.
  சூப் தயாரிப்பில், கெட்டியாக இருக்க சோள மாவு சேர்க்கப்படுகிறது. இதன் அளவைக் குறைத்து, சத்து மாவைச் சேர்த்தால் கூடுதல் சத்துக்கள் கிடைக்கும். நாம் தயாரிக்கும் எந்த பதார்த்தம் நீர்த்துப் போனாலும், அதில் சத்துமாவைக் கரைத்து விட்டால், அது கெட்டியாகிவிடும்.
  வெண்பொங்கல் செய்யும்போது, குக்கரைத் திறந்த சூட்டோடு, ஆறிய பாலை இரண்டு கரண்டி அளவு அதில் விட்டுக் கிளறி, மசித்து வைத்துவிட்டால், பரிமாறும்போது நன்றாக இளகியிருப்பதுடன், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
  சேப்பங்கிழங்கு வேகவைக்கும்போது, சில கிழங்குகள் வேகாமல் கல்போல அப்படியே இருக்கும். வெந்தவற்றை சமையலுக்குப் பயன்படுத்திவிட்டு, கல்போல இருக்கும் கிழங்குகளைத் தனியே எடுத்து, தோல் சீவி வட்டமாக நறுக்கி எண்ணெயில் பொரித்து... உப்பு, காரம் தூவி சாப்பிட்டால்... சூப்பரோ சூப்பர்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக