>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 டிசம்பர், 2019

    இதில் தவறு யார் மேல்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    இது சிரிக்க மட்டுமே...!!

    மாலினி : எங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போயிருச்சு?
    கலா : என்னடி சொல்ற?
    மாலினி : அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
    கலா : 😂😂
    -------------------------------------------------------------------------------------------------------------
    ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் சேர்ந்தே இருப்பீங்க...
    கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா? ஜோதிடரே...!
    ஜோதிடர் : 😅😅
    -------------------------------------------------------------------------------------------------------------

    விமலா : ரேஷன் கடையில வேலை பாக்குறவர கல்யாணம் பண்ணிக்கிட்டியே லைஃப் எப்படி போகுது?
    கமலா : அதை ஏன் கேக்குற? எப்ப பாத்தாலும் எடையை குறை, எடையை குறைன்னு சொல்லிக்கிட்டே இருக்காரு.
    விமலா : 😛😛
    -------------------------------------------------------------------------------------------------------------

    டாக்டர் : உங்க மாமியாருக்கு கால்ல எப்போ முள் குத்துச்சு?
    மருமகள் : ஆறுமாசம் ஆச்சு டாக்டர்.
    டாக்டர் : உடனே வந்திருந்தா முள்ளை எடுத்திருக்கலாமே? இப்போ புண்ணாயிருச்சே.
    மருமகள் : பரவாயில்லை டாக்டர்... கால்-ஐ எடுத்துடுங்க.
    டாக்டர் : 😳😳
    -------------------------------------------------------------------------------------------------------------

    அருண் : என்னதான் கப்பலே மூழ்கினாலும், கன்னத்துல மட்டும் கை வெக்கக்கூடாது.
    குமார் : ஏன்?
    அருண் : கன்னத்துல கை வெச்சா அப்புறம் நீச்சல் அடிக்க முடியாதேப்பா!!!
    குமார் : 😠😠
    -------------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு.

    பொருள் :

    வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும். அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
    -------------------------------------------------------------------------------------------------------------

    தவறு யார் மேல்...?
    நாம் சென்ற இடத்தில் மரியாதை
    கொடுக்கவில்லை என்று சொல்வது தவறு...

    மரியாதை இல்லாத இடத்திற்கு
    நாம் சென்றதுதான் தவறு...

    யோசித்து பார்த்தால் தவறு அதிகம்
    நம் மேல்தான் இருக்கும்.

    பொன்மொழிகள்..!!
    🌟 வெற்றி என்பது உன் நிழல் போல,
    நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை.
    நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
    அது உன்னுடன் வரும்.

    🌟 உலகம் உன்னை அறிவதை விட,
    உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்.

    🌟 உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள்.
    பறக்க கற்றுக் கொள்ளுங்கள்.
    உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.

    🌟 நாள் முழுவதும் கணத்திற்கு கணம்,
    நேர்மையாய், துணிவாய், உண்மையாய், உழைக்கிறவனின்
    கரங்களே அழகிய கரங்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக