எந்த செயலாக இருந்தாலும்... விறுவிறுப்பாக
செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!!
மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில்,
சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க
இருக்கின்றது.
உங்கள் ராசிநாதன், உங்கள் ராசியில்
ஆட்சிப்பெற்ற நிலையில் இருக்க இந்த புதுவருடம் துவங்க இருக்கின்றது. மனதில்
நினைத்த எண்ணத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.
புதிய தன்னம்பிக்கையுடனும்,
எழுச்சியுடனும் செயல்பட துவங்குவீர்கள். சகோதர வகையில் சாதகமான சூழல் உண்டாகும்.
வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப
முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
தடைபட்டு கொண்டிருந்த தனவரவுகள்
சாதகமாக அமையும். புதிய இருப்பிடம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதற்கான
முயற்சிகள் மேம்படும். மனைவிவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு
:
கட்சி சார்ந்த பணிகளில் அரசியல்
தொடர்பு மற்றும் கௌரவப் பதவிகள் கிடைக்கும். தொகுதி சார்ந்த நிலவரங்களை அறிந்து
அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவது மேன்மை அளிக்கும்.
விவசாயிகளுக்கு
:
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள்
கிடைக்கும். பயிர் விளைச்சல்களின் மூலம் இலாபகரமான சூழல் உண்டாகும். முன்கோபத்தை
குறைத்து கொள்ளவும்.
வியாபாரிகளுக்கு
:
கௌரவ பதவிகளால் வியாபாரிகளின்
மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எதையும் சாதிக்கும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுபவம் மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.
மாணவர்களுக்கு
:
மாணவர்கள் கல்வியில் சற்று
விழிப்புணர்வுடன் செயல்படவும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து அவர்களிடம் பழகுவது
சிறப்பை தரும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.
பெண்களுக்கு
:
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து
வேறுபாடுகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிதல் உணர்வு மேம்படும். உடன் இருப்பவர்கள்
பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்து கொண்டிருந்த வேலை வாய்ப்புகள் சாதகமாக
அமையும். தடைபட்டு கொண்டிருந்த திருமணம் சாதகமாக முடிய வாய்ப்புண்டு. பெற்றோரின்
அரவணைப்பு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
:
பணி நிமிர்த்தமான சூட்சமங்களை
கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.
மற்றவர்களை நம்பி பொறுப்புகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். சக
ஊழியர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை
தவிர்ப்பது நன்மையை அளிக்கும். கணினி சார்ந்த துறையில் இருப்பவர்கள் கண்களை
பரிசோதித்துக் கொள்ளவும்.
கலைஞர்களுக்கு
:
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள்
சாதகமாக அமையும். கலைத்துறையில் உங்களின் மீதான மரியாதை அதிகரிக்கும். நுணுக்கமான
செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
பரிகாரம்
:
தினந்தோறும் விநாயகரை வழிபாடு செய்துவர
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக