இப்போது வரும் புதிய புதிய
தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வகம் காட்டுகின்றனர், குறிப்பாக
ஸ்மார்ட்போன் மூலம் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். மேலும் செல்போன்
மட்டுமே உலகம் என சில நபர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறனர், ஆனால் செல்போன்
உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் தாண்டி நல்ல நண்பர்கள், உறவினர்கள்
இருப்பார்கள்,அவர்களிடம் பேசி பழகுவதால் கண்டிப்பாக பல நன்மைகள் இருக்கிறது.
புதுச்சேரி ஜீவானந்தபுரம்
புதுச்சேரி ஜீவானந்தபுரம் அருகே
பாலாஜி வீதியில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி, 22வயதான இவருக்கும்
பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த
2017-ம் ஆண்டு திருமணம்
நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு
8மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
பிரசவத்துக்குப்பின் இங்கேயே
தங்கியிருந்தார்
திருப்பூரில் பணியாற்றி வருகிறார்
சரவணன், இந்நிலையில் பிரசவத்துக்காக புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த
செல்வி பிரசவத்துக்குப்பின் இங்கேயே தங்கியிருந்தார். மனைவி மற்றும் குழந்தைகள்
மீது அதிக பாசம் வைத்திருந்தத சரவணன் அவ்வப்போது புதுச்சேரிக்கு வந்து மனைவி
மற்றும் குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றுருக்கிறார்.
2-வது மாடிக்கு சென்ற செல்வி..
இதனிடையே நேற்று முன்தினம் இரவு
10.15மணிக்கு வீட்டின் 2-வது மாடிக்கு சென்ற செல்வி, தனது கணவருடன் செல்போனில்
பேசிக்கொண்டிருந்தார். குழந்தை பேசுவது, தவழ்வது,சாப்பிடுவது, விளையாடுவது என
அனைத்தையும் கணவரிடம் சந்ததோஷமாகக் கூறி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
கீழே விழுந்தார்
ஒரு கட்டத்தில் பேச்சு சுவாரஸ்யத்தில்
தான் எங்கு நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து, உயரம் குறைவாக
அமைக்கப்பட்டிருந்த கைப்பிடிச் சுவரில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது
குறிப்பாக 2-வது மாடியிலிருந்து கீழே
விழந்த செல்வியின் தலையில் பலமான காயம் ஏற்பட்டுவிட்டது, படுகாயங்களுடன் மயக்க
நிலையில் இருந்த அவரை மீட்ட பெற்றோர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும்
சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தார் செல்வி.
வேறு ஏதேனும் காரணம் இருக்குமா ?
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக
செல்வியின் தந்தை திருமலை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து
காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருமணமாகி
2வருடத்துக்குள் உயிரழந்திருப்பதால் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற
கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக