சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு சேர நேர்க் கோட்டில் வரும்
நிகழ்வே கிரகணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி அவ்வப்போது சூரிய கிரகணம்,
சந்திர கிரகணம் ஆகியவை நிகழ்கின்றன.
வளைய சூரிய கிரகணம்
டிசம்பர் 26 ஆம் தேதியன்று வளைய சூரிய
கிரகணம் நிகழ இருக்கிறது. இதுபோன்று மற்றொரு வளைய சூரிய கிரகணத்தை காண வேண்டும்
என்றால் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வளைய
சூரிய கிரகணத்தை தமிழகத்தில் பார்க்கமுடியும்.
சூரிய கிரகணம் என்றால் என்ன
சூரியனை பூமி சுற்றி வருகிறது, பூமியை
நிலவு சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வரும் போது மூன்றும் ஒரே நேர்கோட்டில்
வந்தால் அதுதான் கிரகணம். சூரியன், நிலா, பூமி என மூன்றும் நேர் கோட்டில்
இருக்கும் போது சூரியன் வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து
பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக
நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். சூரியனின் மையப்பகுதியில் நிலவு
மறைத்தால் அதுதான் வளைவு சூரிய கிரகணம், இதில் விழிம்பில் மட்டும் சூரிய ஒளி
தென்படும்.
சந்திர கிரகணம் என்றால் என்ன
அதேபோல் சூரியன், பூமி, நிலா என மூன்றும்
இந்த வரிசையில் நேர்கோட்டில் வரும்போது, சூரியனில் வெளிச்சத்தால் பூமியின் நிழல்
நிலவை மறைக்கும். அப்படி மறைக்கும் போது நிலவு மறையத் தொடங்கும் இதுதான்
சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
கிரகணத்தை எப்படி பார்க்கலாம்
நிலவை விட சூரியன் 400 மடங்கு பெரியது.
ஆனால் பூமியில் இருந்து சூரியன் நிலவைவிட வெகு தொலைவில் இருப்பதால்தான் நிலவும்
சூரியனும் ஒரே அளவில் தெரிகிறது. இந்த டிசம்பர் 26 ஆம் தேதி நடக்கும் சூரிய
கிரகணத்தை அனைவரும் சூரிய கண்ணாடியுடன் பாதுகாப்பாக பார்க்கலாம். சூரிய கண்ணாடி
என்பது ரூ.10 முதல் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது.
தமிழகத்தில் பார்க்கக்கூடிய இடங்கள்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை,
திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு
மாவட்டங்களில் வளைய சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். 26-ந் தேதி காலை 8.06 மணிக்குத்
தொடங்கும் சூரிய கிரகணம் காலை 11.14 மணிக்கு முடிகிறது. 9.31 முதல் 9.34 வரை வளைய
சூரிய கிரகணம் 3 நிமிடங்கள் நீடிக்க இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக