குருகிராமை அடிப்படையாகக் கொண்ட 24
வயதான இளம் தொழிலதிபரான ரித்தேஷ் அகர்வால் என்பவரால் நிறுவப்பட்டது தான் ஓயோ
நிறுவனம். இது பட்ஜெட் விலையில் ஹோட்டல் ரூம்களை புக் செய்யும் நிறுவனமானகும்.
நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில்
பலவேறு துறைகளில் பணி நீக்கம் இருந்து வந்த நிலையில், முதல் முறையாக விருந்தோம்பல்
துறையில் பணி நீக்கம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அந்த
நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்திய அளவில் மிகப்பெரிய அளவில்
பெயர்போன ஸ்டார்டப் நிறுவனமானது, வரும், ஜனவரி மாத முடிவுக்குள் 2,000 பேரை பணி
நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது இதன் ஊழியர்கள் மத்தியில் பெரும்
கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
செலவை மிச்சபடுத்த ஆட்குறைப்பு
நடவடிக்கை
நாட்டின் முன்னணி ஹோட்டல்
விரும்தோம்பல் நிறுவனமான ஓயோ, நிலவி வரும் மந்த நிலையில் மனித வள செலவுகளை
மிச்சப்படுத்துவதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும்
கூறப்படுகிறது. இதனை ஈடுகட்ட இந்த நிறுவனம் தற்போது சில செயல் முறைகளில் தொழில்
நுட்பத்தை புகுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
எந்த பிரிவில் ஆட்குறைப்பு
இந்த துறைக்கு நெருக்கனமானவர்கள்
அளித்துள்ள அறிக்கையில், இந்த பணி நீக்கமானது விற்பனை பிரிவு, சப்ளை, மற்றும்
இயக்கத் துறையில் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்டார்டப் நிறுவனம் ஒவ்வொரு மாதமும், தனது ஊழியர்களின் செயல்திறனை மதிப்பாய்வு
செய்வதாகவும், இவ்வாறு மதிப்பாய்வு செய்யப்பட்டவர்களில் திறமையானவர்களை வைத்துக்
கொண்டு மற்றவர்களை பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
பணி நீக்கம் உறுதி
இவ்வாறு மதிப்பாய்வு செய்யப்பட்ட
திறமையானவர்களை கூட பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நெருங்கிய
வட்டாரங்களில் கூறப்படுவதாக பிசினஸ் டுடே பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும்
இந்த ஊழியர்களின் சராசரி சம்பளம் 10 -12 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்றும்
நம்பப்படுகிறது. ஆக இது ஊழியர்களின் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது
என்றே கூறலாம்.
அதிகரிக்கும் நஷ்டம்
ஒயோ நிறுவனத்தின் கடந்த 2019ம்
நிதியாண்டில் இதன் நிகர இழப்பு 2.384 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில்
கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த நஷ்டமானது முந்தைய ஆண்டை காட்டிலும்
ஆறு மடங்கு அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் இயக்க செலவுகள் மற்றும் பணியாளர்
செலவுகள் என்றும் கருதப்படுகிறது. இதில் குறிப்பாக பணியாளர் செலவு மட்டும் ஆறு
மடங்கு அதிகரித்து 1,539 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே இயக்க
செலவினங்களும் 6 மடங்கு அதிகரித்து 6,131 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த
நிறுவனம் கூறியிருந்தது கவனிக்கதக்கது.
பொதுப் பங்கு வெளியீடு
இந்த நிலையில் இப்படியொரு நஷ்டத்தினை
ஈடுகட்டவே இந்த நிறுவனம் இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்திருக்கலாம் என்றும்
கருதப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஓயோவின் கனவான பொதுப்
பங்கு வெளியீடு, நீடித்து வரும் நஷ்டத்தினால் எப்போது கைகூடும் என்ற
எதிர்பார்ப்பிலேயே உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக