Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 டிசம்பர், 2019

யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?


 Image result for யாருக்கு என்ன யோகம்
 விமல யோகம் :

னிரெண்டாம் அதிபதி பனிரெண்டாம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது பனிரெண்டாமிடத்தைப் பனிரெண்டாம் அதிபதியே பார்வை இடுவதால் விமல யோகம் உண்டாகும்.

 விமல யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

தனம் சேர்ப்பார்கள்.

புகழ் வாய்ந்தவராக இருப்பார்கள்.

 பாலை யோகம் :

சூரியனுக்கு பனிரெண்டாம் இடத்தில் குரு அமைந்தால் ஏற்படுவது பாலை யோகம் ஆகும்.

 பாலை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

பல துறைகளில் ஞானம் கொண்டவராக இருப்பார்கள்.

 வேசி யோகம் :

சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் சந்திரனை தவிர பிற கிரகங்களின் அமைவு இருப்பின் உண்டாவது வேசி யோகம் ஆகும்.

 வேசி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

சுய சம்பாத்தியம் மூலம் முன்னேற்றம் அடைவார்கள்.

தனம், கீர்த்தி மற்றும் புத்தி கொண்டவராகவும் சிறந்து விளங்குவார்.

 வாசி யோகம் :

சூரியனுக்கு பனிரெண்டில் சந்திரனை தவிர பிற கிரக அமைவு இருப்பின் வாசி யோகம் உண்டாகும்.

 வாசி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

செல்வ செழிப்புடன் சுபிட்சமாய் வாழ்வார்கள்.

 வரிஷ்ட யோகம் :

சூரியனுக்கு மூன்று, ஆறு, ஒன்பது மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் சந்திரன் அமைவதால் உண்டாவது வரிஷ்ட யோகம் ஆகும்.

 வரிஷ்ட யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

அறிவாளியாக இருப்பார்கள்.

வீடு, மனை மற்றும் வாகனச் சேர்க்கை இவர்களுக்கு உண்டாகும்.

பணிவு, மரியாதை போன்ற நற்குணங்கள் உடையவர்கள்.

 அதம யோகம் :

சூரியனுக்கு ஒன்று, நான்கு, ஏழு மற்றும் பத்தாம் வீடுகளில் சந்திரன் இருந்தால் அதம யோகம் உண்டாகும். இந்த யோகத்தால் எவ்வித பலன்களும் உண்டாகாது.

 சம யோகம் :

சூரியனுக்கு இரண்டு, ஐந்து, எட்டு மற்றும் பதினொன்றில் சந்திரன் இருந்தால் சம யோகம் உண்டாகும்.

 சம யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

ஆரோக்கியம், கல்வி ஞானம், இன்பம் மற்றும் தனம் என அனைத்தும் சரிசமமாக கிடைக்கும்.

 அமாவாசை யோகம் :

சூரிய சந்திர சேர்க்கையால் உண்டாகுவது அமாவாசை யோகம் ஆகும்.

 அமாவாசை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

சாதுரியமான பேச்சுத் திறனை கொண்டவர்கள்.

எந்த வேலையையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

இயந்திர பாகம் உடைய தொழிற்சாலையில் பணி புரியும் திறமை கொண்டவர்கள்.

 கேசரி யோகம் :

சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அல்லது குரு அடைவது கேசரி யோகம் எனப்படும்.

 கேசரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

தைரியம், வீரம் உடையவர்கள்.

ஆயுள் விருத்தி கொண்டவர்கள்.

 கஜ கேசரி யோகம் :

குருவும் சந்திரனும் சம சப்தமானாய் கேந்திர நிலையை பார்ப்பதால் உருவாகுவது கஜ கேசரி யோகம் ஆகும்.

கஜ கேசரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வீரம், அறிவு மற்றும் புகழ் கொண்டவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக