ஊட்டியிலிருந்து ஏறத்தாழ 14கி.மீ தொலைவிலும்,
கோவையிலிருந்து ஏறத்தாழ 97கி.மீ தொலைவிலும் இயற்கை எழில்கொஞ்சும் இடமாக பெலிக்கல்
திகழ்கிறது.
சிறப்புகள் :
பெலிக்கல் இயற்கையின் தூய்மையான சுற்றுலாத்
தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
அமைதியான சூழலில் இருக்கும் இந்த இடத்திற்கு
செல்வதற்கு ஊட்டியின் பல கொண்டை ஊசிகளை கடந்து தான் செல்ல வேண்டும்.
இங்குள்ள அமைந்துள்ள மோயர் ஆறு, முதுமலை மற்றும்
பந்திப்பூர் காடு போன்ற இடங்களில் உள்ள இயற்கை அழகுகள் நம் கண்களுக்கு அழகாக
காட்சியளிக்கும்.
பெலிக்கல்லில் காட்டுப்பகுதியில் உள்ள புலிகள்,
காட்டு எருமைகள், பறவைகள் என அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச்
செல்கின்றனர்.
இங்குள்ள பெலிக்கல் ஏரி தனிச்சிறப்புகளைக்
கொண்டுள்ளது. அங்கு யானைக் கூட்டங்கள் நீர் அருந்தும் காட்சிகளை பார்த்து
ரசிக்கலாம்.
12
ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் இப்பகுதியில் உள்ளன.
அமைதியும், பசுமையும், குளிரும் நிறைந்த
சுற்றுலாத் தலமாக பெலிக்கல் உள்ளது.
எப்படி செல்வது?
ஊட்டியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி
வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
எமரால்ட் ஏரி.
கேத்தரின் நீர்வீழ்ச்சி.
ரூக் கோட்டை.
புலிமலை.
பைசன்
பள்ளத்தாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக