பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் அப்ளிகேஷனை பயன்படுத்த தங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது.
இந்த புதிய விதிமுறை பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் அப்ளிகேஷன்களுக்கு பொருந்தும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது பேஸ்புக் அக்கவுண்ட் கொண்டு சைன் இன் செய்ய வேண்டி இருக்கும். இதனை பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்சமயம் மெசஞ்சர் அப்ளிகேஷனை பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் அக்கவுண்ட் இல்லாமல் மெசஞ்சர் அப்ளிகேஷனை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக