1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513).
இது
பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம் நூற்றாண்டின்
துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த அட்மிரல் பதவியில் இருந்தவர்.
வரைபட இயலில் பேரார்வம் உடையவர் காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில்
சுதந்திரமான அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது. கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும்
அதற்கு முந்திய காலகட்டத்தை சார்ந்ததாக கருதப்படும் வரைபடங்களில் இருந்து அச்சு
அசல் நகல்களை படி எடுத்தார்.
பிரிரெய்ஸ்
வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதி, தென்அமெரிக்காவின் கிழக்கு
கடற்கரைப்பகுதி, மற்றும் அண்டார்டிகாவின் வட கடற்கரைப்பகுதி தெளிவாக அடையாளம் காண
முடிந்தது. முக்கியமாக வடஅண்டார்டிகா கடற்கரைப்பகுதி தெளிவாக புரிந்து
கொள்ளக்கூடிய வகையில் தெளிவாக இருந்தது. இந்த இடத்தில் தான் பிரச்சினைக்குறிய பல
குழப்ப முடிவுகள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உட்பட்டது.
பிரிரெய்ஸ்
“கிதாபி பாஃக்ரியே” [Kitabi Bahriye] எனும் பயணப்புத்தகம் எழுதியிருக்கிறார் இதில்
கடற்கரை அமைவுகள், குடாக்கள், துறைமுகங்கள், நீரோட்டங்கள், கணவாய்கள் குறித்த
தகவல்கள் காணப்படுகின்றன.
கிடைத்த
புவியியல் ஆதாரங்களில் இருந்து குயின் மெளவுட்லேன்ட் [ Queen Maud Land ] எனும்
பகுதியில் மூடியிருந்த பனி கட்டிகள் உருக தொடங்கியது கி.மு 4000 வருடங்களுக்கு
முன்.
ஆதாரப்பூர்வமான
செய்தி என்னவென்றால் அன்டார்டிகா மற்றும் இந்த பனி முனையானது பல மில்லியன்
ஆண்டுகள் பனியால் உறைந்து போயிருந்தது அதாவது முழுக்க முழுக்க பனிகட்டி பாளங்களால்
மூடியிருந்தது
கொலம்பஸ்
1492 ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார் எனும் போது அதற்கு முன்பே துல்லியமாக தென்
அமெரிக்க கரைகள் வரையப்பட்டுள்ளது ஆச்சர்யமானது.
1820
வரை அண்டார்டிகா அறியப்படவில்லை ஆனால் பனிமூடிய இதன் கரைகள் துள்ளியமாக இவரால்
வரையப்பட்டுள்ளது எப்படி?
பிரிரெய்ஸ்
வரைபடத்தில் வடக்கு கண்டப் பகுதி பனிமூடியதற்கு முன் வரையப்பட்டது அப்படியானால்
இது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதா ? இப்படி ஒரு முடிவுக்கு வரமுடியாது
அப்போது மனித இனமே இருக்க வாய்ப்பில்லை.
இன்னும்
தீர்க்கமான ஆய்வுகளின் படி, பனி உருகிய இறுதி காலம் 6000 வருடங்களுக்கு முன்.
[ஆனால் பனி உருகிய காலம் பற்றி
இன்னும் தீர்க்கப்படாத சந்தேகம் உள்ளது. பல ஆராய்சியாளர்களின் கருத்துப்படி பனி உருகிய
காலம் 13000 இருந்து 9000 B C. ]
அண்டார்டிக்கின்
குயின் மெளவுட் நிலப்பகுதி [ Queen Maud Land ] வரைபடம் 6000 வருடங்களுக்கு முன்னால்
வரைந்தது யார் ? அல்லது இனந்தெரியாத எந்த நாகரீகம் இதை வரைந்திருக்கலாம்
எப்படிபட்ட வரைதல் தொழிற் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ?
இதுபோன்ற
வியப்பான விடை தெரியா கேள்விகள் அல்லது ரகசியங்கள் தொக்கி நிற்கிறது.
கி.மு
3000 ல் மத்திய கிழக்கில் முதல் கடல் வணிகத்தில்
எந்த எந்த நாகரீகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் ?
சிந்து சமவெளி நாகரீகத்தால் அல்லது சீன நாகரீகத்தால் அல்லது இன்னும் வேறேதேனும் நாகரீகமா ? தெரியவில்லை.
எந்த எந்த நாகரீகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் ?
சிந்து சமவெளி நாகரீகத்தால் அல்லது சீன நாகரீகத்தால் அல்லது இன்னும் வேறேதேனும் நாகரீகமா ? தெரியவில்லை.
நவீன
தொலிற் நுட்பத்தில் வரையப்பட்ட வரைபடங்களை போல் எப்படி கி.மு 4000 ஆவது
ஆண்டில் தத்ரூபமாக வரையமுடிந்தது ? என்பது அறிய முடியாத ரகசியமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக