பொங்கல்
பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு
தொடங்கியுள்ளது.
தமிழகத்தில்
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை தொடர் விடுமுறையின் போது, பல்வேறு பகுதிகளில்
வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு மற்றும் ஆம்னி
பேருந்துகளில் பயணிக்கின்றனர். அரசு விரைவுப் பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே
டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
எனவே,
இந்த வசதியைப் பயன்படுத்தி பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் பொங்கலையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு
பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக்கூட்டம் இந்த மாத
கடைசியில் நடத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்
தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு விரைவுப் பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே
டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. எனவே, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர்,
இந்த வசதியைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான முன்பதிவு
தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக