>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 24 டிசம்பர், 2019

    அதிர்ஷ்ட லட்சுமி யோகம்

     Image result for அதிர்ஷ்ட லட்சுமி யோகம்
    அதிர்ஷ்ட லட்சுமி யோகம் :

     ளத்திரகாரனான சுக்கிரன் லக்னத்திற்கு ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாவது இடங்களில் நின்று சுக்கிரன் ஆட்சி செய்யும் இடம் நட்பு வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் அது அதிர்ஷ்ட லட்சுமி யோகம் எனப்படும்.

    அதிர்ஷ்ட லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     லட்சுமி கடாட்சம் மிக்கவர்.

     பெண்களின் நேசமும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

    பேரி யோகம் :

     சுக்கிரனுக்கு குரு கேந்திரம் பெற்று, ஒன்பதாம் இடத்தில் வலுத்து நின்று பலமாய் அமைந்திட பேரி யோகம் ஆகும்.

    பேரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     நோயில்லாமல் சுகமாய் வாழ்வார்கள்.

     நல்ல குணமுடைய ஆசார சீலனாய் வாழ்வார்.

    தாரை யோகம் :

     சந்திரனுக்கு நான்காம் வீட்டிலோ அல்லது பத்தாம் வீட்டிலோ சுக்கிரன் இருந்தால் தாரை யோகம் உண்டாகும்.

    தாரை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     பெரும் மனைக்கு உரியவராக திகழ்வார்.

     சொகுசான வாகன வசதியை அமையப் பெற்றவராகவும் இருப்பார்.

     தனத்திற்கு உரியவராகவும் விளங்குவார்.

    கோடீஸ்வர யோகம் :

     ராகு கேந்திரத்தில் தனித்து நின்றால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.

     ராகு சரராசிகளில் ஒன்று தனித்து நின்றும், குருவுடன் கேது சேர்ந்து இருந்தாலும் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.

     புதனும், சுக்கிரனும் அல்லது புதனோ, சுக்கிரனோ குரு கேதுவுக்கு 9ல் நின்றால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.

     ராகுவுக்கு 9ல் புதனும் சுக்கிரனும் நின்றால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.

    கோடீஸ்வர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     சொத்து சேர்க்கை உண்டாகும்.

     அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும்.

     கீர்த்திக்கு உடையவராக வாழ்வார்.

    நிபுண யோகம் :

     லக்னத்திற்கு 2, 4 மற்றும் 8ல் புதன் உச்சம் மற்றும் ஆட்சி வீடாக அமைந்தால் நிபுண யோகம் அமைத்திடும்.

    நிபுண யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     எதையும் சாதிக்க வல்லவர்.

     கல்வியில் சிறந்த நிபுணர் ஆவார்.

     நீதி நிர்வாகத்தில் திட்டம் தீட்டும் வேலை உடையவர்.

    சமத்துவ யோகம் :

     லக்னத்திற்கு பூர்வ புண்ணியமான ஐந்தாம் அதிபதியும் பாக்கியாதிபதியும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் அதிபதிகள் கர்மாதிபதியும் ஒரே இடத்தில் கூடிட அதுவும் லாப கேந்திரமாகிவிடில் சமத்துவ யோகம் உண்டாகும்.

    சமத்துவ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     அனைத்து செல்வங்களையும் அளித்திடும்.

     சொல் அதிகாரம் உள்ள பதவிகள் உண்டாகும்.

     அதுமட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, வீடு, நிலம் மற்றும் அலங்கார பொருள்கள் அனைத்தையும் அடைவார்.

    விபரீத ராஜ யோகம் :

     எட்டுக்குடையவன் ஆறாம் வீட்டிலோ அல்லது பனிரெண்டாம் வீட்டிலோ இருந்தால் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

     எட்டுக்குடையவனும், ஆறுக்குடையவனும் பரிவர்த்தனைப்பட்டு இடம் மாறி நின்றாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

     எட்டுக்குடையவனும், பனிரெண்டுக்குடையவனும் பரிவர்த்தனைப்பட்டு இடம் மாறி நின்றாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

    விபரீத ராஜ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     எட்டுக்குடையவனின் தசை காலங்களில் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

     நிலம் மற்றும் வாகனச் சேர்க்கை உண்டாகும்.

    பிருகு மங்கள யோகம் :

     மங்களகாரகரான செவ்வாயும் களத்திரகாரகரான சுக்கிரனும் ஆட்சி, உச்சம், நட்பு மற்றும் கேந்திரம் கோணம் இவைகளில் கூடி நின்றால் பிருகு மங்கள யோகம் உண்டாகும்.

    பிருகு மங்கள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     மனை மூலம் லாபம் உண்டாகும்.

     வாகன வசதிகள் அமையும்.

     நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

    கலாநிதி யோகம் :

     குருவும், சந்திரன் மற்றும் சுக்கிரனும், புதனும் மற்றும் இவர்களுடன் சூரியனும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் எந்த வித ஆதிபத்தியத்தில் இருந்தாலும் கலாநிதி யோகம் உண்டாகும்.

    கலாநிதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     நல்ல பதவி, அந்தஸ்து மற்றும் அதிகாரம் கிடைக்கும்.

    தனம், ஐஸ்வர்யம் மற்றும் புகழ் கிட்டும்.

     ஆயுள் பலத்துடன் நல்ல இல்லறமும், சந்தான பாக்கியமும் பெற்று சகல சீரும் சிறப்புடனும் வாழ்வார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக