பஞ்சபட்சி சாஸ்திரம்...!!
எந்தவொரு செயலை மேற்கொள்ளும்போதும், அன்றைய தினத்தில் அவர்களின் பட்சிகளின் நிலைகளை அறிந்து செயல்பட்டால், திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொரு பட்சியும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில பணிகளை மேற்கொள்ளும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலைகள் மற்றும் அதில் பட்சிகள் செய்யும் செயல்களின் தன்மைகளை அறிவோமேயானால், அதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு இருக்கும் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள இயலும்.
பட்சிகள் செய்யும் தொழில் மற்றும் அந்த தொழில் ஈடுபட்டு இருக்கும் காலத்தில் நாம் மேற்கொள்ளும் செயலுக்கு நம் பட்சியானது எவ்வளவு பலத்துடன் செயல்படும் என்பதை பின்வரும் அட்டவணையில் காண்பாம்.
வ.எண்பட்சிகளின் தொழில்பட்சிகளின் பலம் 1.அரசு100மூ பலம் கொண்டது 2.ஊண்80மூ பலம் கொண்டது3.நடை 50மூ பலம் கொண்டது 4.துயில்25மூ பலம் கொண்டது 5.சாவு0மூ பலம் கொண்டது
ஒவ்வொரு பட்சியும் பகல் மற்றும் இரவு பொழுதுகளை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அந்த பட்சிகள் மேற்கொள்ளும் பணிகள் யாதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்சியானது ஒரு நாள் முழுவதும் ஒரே தொழிலை மேற்கொள்ளுமா என்றால் மேற்கொள்வது இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒரு தொழிலை மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் மற்றொரு தொழிலை மேற்கொள்ளும்.
ஒரு நாளில் பட்சி பலமுள்ள அந்த குறிப்பிட்ட நேரத்தை எப்படி அறிந்து கொள்வது? என்பதை நாளைய பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக