![முன்கூட்டியே வெளியான வினாத்தாள்கள்.! மாணவர்கள் மகிழ்ச்சி ஆசிரியர்கள் அதிர்ச்சி.!](http://dinasuvadu.com/wp-content/uploads/2019/12/cccccc.jpg)
தமிழகத்தில்
13-ம் தேதி 10-ம் வகுப்புக்கும் மற்றும் கடந்த 11-ம் தேதி 11, 12-ம் வகுப்புகளுக்கு
தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஹலோ எனும் அப்ளிகேஷனில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே பதிவேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வின் வினாத்தாள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 12-ம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் 2 நாட்களுக்கு முன்பாகவே வெளியானதாக கூறப்படுகிறது.
அதே போல் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற 11-ம் வகுப்பு வேதிதியல் தேர்வுக்கான வினாத்தாளும், முந்தைய நாளே வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக