சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான
விவோ தனது எக்ஸ் சீரிஸ் வரிசையின் கீழ் விவோ எக்ஸ் 30 மற்றும் விவோ எக்ஸ் 30 ப்ரோ எனும்
இரண்டு புதிய ஸ்மார்ட்போன்க அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்களை
விலை நிர்ணயம் என்ன? இதன் அம்சங்கள் என்ன? ப்ரோ மாடலில் என்னென்ன மேம்பாடுகளை காண முடிகிறது?
போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
விவோ எக்ஸ் 30 தொடரின் பிரதான அம்சங்கள்:
விவோவிலிருந்து
வரும் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய சிறப்பம்சங்களாக இதன்
ஒருங்கிணைந்த 5 ஜி மோடம் மற்றும் கேமரா அமைப்புகளை கூறலாம். விவோ எக்ஸ் 30 ப்ரோ
மற்றும் விவோ எக்ஸ் 30 ஆகியவைகள் கேமரா விவரக்குறிப்புகளின் அடிப்படையில்
வேறுபடுகின்றன என்பதும், மற்ற அம்சங்கள் பொதுவாக உள்ளன என்பதும்
குறிப்பிடத்தக்கது. இரண்டுமே 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற சேமிப்பகங்களை
கொண்டுள்ளன.
விவோ எக்ஸ் 30 மற்றும் விவோ எக்ஸ் 30 ப்ரோவின் விலைகள்:
பெரும்பாலும்
பொதுவான அம்சங்களை கொண்டிருந்தாலும் கூட, பெயர் குறிப்பிடுவது போல, ப்ரோ மாடல்
மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கிறது, உடன் அதன் விலையும் அதிகமாக
இருக்க்கிறது. இதன் அடிப்படை வேரியண்ட் ஆனது (இந்திய மதிப்பின்படி) தோராயமாக
ரூ.40,600 என்றும் மற்றும் இதன் ஹை எண்ட் வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.43,600
என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மறுகையில்
உள்ள விவோ எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் ஆனது (இந்திய மதிப்பின்படி
தோராயமாக ரூ.33,500 என்றும் மற்றும் இதன் டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது தோராயமாக
ரூ.36,500 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ் 30 மற்றும் விவோ எக்ஸ் 30 ப்ரோ - பொதுவான அம்சங்கள்:
விவோ
எக்ஸ் 30 மற்றும் விவோ எக்ஸ் 30 ப்ரோ ஆகிற இரண்டுமே 6.44 இன்ச் அளவிலான முழு
எச்டி+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன இதை எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே என்று விவோ
அழைக்கிறது, இது 1200 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு மற்றும் 2000000: 1 என்ற
காண்ட்ராஸ்ட் விகிதம் போன்றவைகளையும் கொண்டுள்ளது.
இதன்
டிஸ்பிளேவில் 32 எம்பி அளவிலான பஞ்ச் ஹோல் செல்பீ கேமராவும் உள்ளது. இந்த இரண்டு
ஸ்மார்ட்போன்களுமே சாம்சங்கின் எக்ஸினோஸ் 980 SoC மூலம் இயக்கப்படுகின்றன, இது 5G
க்கான ஆதரவைக் கொண்டுவருகிறது. இது 3.55Gbps (4G மற்றும் 5G இரண்டையும் இணைத்து)
கோரப்பட்ட டேட்டா ஸ்பீடை வழங்கும் என்று விவோ கூறுகிறது.
பேட்டரி மற்றும் ஓஎஸ்:
ஒரு
4,350 எம்ஏஎச் பேட்டரியின் ஆதரவுடன் வரும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 33W
ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவை கொண்டுள்ளன. மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்:
கருப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே
நிறுவனத்தின் சமீபத்திய கஸ்டம் UI பதிப்பின் கீழ் இயங்குகின்றன, அதாவது Android
9.0 Pie அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த FuntouchOS 10 மூலம் இயங்குகிறது.
இணைப்பு ஆதரவுகள் & சென்சார்கள்:
இதில்
ஃபேஸ் அன்லாக் மற்றும் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகிய இரண்டுமே உள்ளன. இணைப்பு
விருப்பங்களை பொறுத்தவரை யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
ப்ளூடூத், வைஃபை 802.11 ஏசி, 5 ஜி போன்றவைகள் உள்ளன.
சென்சார்களை
பொறுத்தவரை, க்ராவிட்டி சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார்,
கைரோஸ்கோப் மற்றும் எலக்ட்ரானிக் காம்பஸ் போன்றவைகள் உள்ளன. அளவீட்டில், விவோ
எக்ஸ் 30 5ஜி மற்றும் விவோ எக்ஸ் 30 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே 158.45x74.10x8.80
மிமீ மற்றும் 196.5 கிராம் எடையை கொண்டுள்ளன.
விவோ எக்ஸ் 30 மற்றும் விவோ எக்ஸ் 30 ப்ரோ - வேற்றுமைகள்:
விவோ
எக்ஸ் 30 ப்ரோ ஆனது ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 எம்பி
அளவிலான முதன்மை கேமரா + 5 எக்ஸ் ஹைப்ரிட் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை
செல்லும் 13 எம்பி அளவிலான பெரிஸ்கோபிக் டெலிஃபோட்டோ கேமரா + 50 மிமீ குவிய நீளம்
32 எம்பி அளவிலான கேமரா + 8 எம்பி அளவிலான வைட் ஆங்கிள் கேமரா ஆகியவற்றை
கொண்டுள்ளது.
மறுகையில்
உள்ள விவோ எக்ஸ் 30 ஐப் பொறுத்தவரை, இது ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. விவோ
எக்ஸ்30 ப்ரோ கொண்டுள்ள பிரத்யேக டெலிஃபோட்டோ கேமராவைத் தவிர்த்து அதே கேமரா
அமைப்பையே கொண்டுள்ளது.
சீன விற்பனை 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது!
இந்த
இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு தேதிகளில் சீனாவில் விற்பனைக்கு வருகின்றது.
விவோ எக்ஸ் 30 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ஆனது டிசம்பர் 24 ஆம் தேதி
விற்பனைக்கு வருகிறது. விவோ எக்ஸ் 30 ப்ரோவின் 8 ஜிபி + 256 ஜிபி மாறுபாடு மற்றும்
8 ஜிபி + 128 ஜிபி மாடல் ஆனது டிசம்பர் 28 முதல் விற்பனைக்கு வருகிறது. விவோ எக்ஸ்
30 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விற்பனை ஆனது பின்னர்
அறிவிக்கப்படும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக