Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சுபஸ்ரீ விவகாரம் : 1,00,00,000 ரூபாய் இழப்பீடு கேட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுபஸ்ரீ விவகாரம் : 1,00,00,000 ரூபாய் இழப்பீடு கேட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு


டந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 
இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில்  ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை  ரவி தொடர்ந்த வழக்கு ஒன்றை  சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்பொழுது ,ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் விசாரணையை  வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக