சமீப காலமாக தங்கத்தை கடத்துதல் என்பது அன்றாட நிகழும் ஒரு செய்தியாக நம்மை தினமும் வந்து சேர்கிறது. இதை தடுக்க இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் பல்வேறு முயற்ச்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா பன்னாட்டு விமானநிலையத்தில் 3 பயணிகளிடமிருந்து 817 கிராம் கடத்தல் தங்கத்தை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் ரூ.32 லட்சம் ஆகும். இதுதொடர்பாக, இந்த தங்கத்தை கடத்திய சையது முஸ்தபா, ராவுத்தர் மற்றும் உதயகுமார் ஆகியோர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக