Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 12

சிவபெருமான் பிரஜாபதியான தட்சனை விட வயதில் மூத்தவரான நான் அவர் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றால் அவருக்கு தானே பாவம் உண்டாகும் அதை தவிர்க்கவே நான் அவரை ஆசிர்வதித்தேன் என்று தாட்சாயிணி தேவியிடம் கூறினார்.

கூற்றில் இருந்த பொருளை உணர்ந்த தாட்சாயிணி தேவி தாம் இழைத்த பிழையை மன்னிக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினார். தேவியே நீ என்னுள் பாதியாவாள்! நீ இழைத்த பிழைக்கு நீ மட்டும் காரணம் இன்றி நானும் அதற்கு காரணமாவேன் என்று கூறினார்.

சிவபெருமான் தன் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மனம் மகிழ்ந்த தாட்சாயிணி தேவி சிவபெருமானை அணைத்துக் கொண்டார். ஆனால், அந்த அரவணைப்பில் தேவி மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தாள். சிவபெருமான் ஏதோ சங்கடத்தில் இருப்பது போல் காட்சியளித்தார்.

பிரஜாபதியான தட்சன் சிவபெருமானை அவமானப்படுத்தும் விதமாக ஒரு மிகப் பெரிய யாகத்தை வளர்த்து அதில் சிவபெருமானை தவிர ஏனைய தேவர்கள் யாவரையும் அழைத்து சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.

பிரஜாபதியான தட்சன் காசியப்ப ரிஷியை அழைத்து தன்னுடைய முடிவை சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆணை பிறப்பித்தார். ஆனால், காசியப்ப ரிஷி சிவபெருமானை தவிர்த்து மற்ற தேவர்களை அழைத்து வேள்வி நடத்தினால் ஏதாவது அனர்த்தம் உண்டாகுமோ என பயந்தார்.

இதை பிரஜாபதியிடம் தெரிவித்தும் எவ்விதமான பயனும் இல்லை. பிரஜாபதி தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்தார். ரிஷியால் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாமல் பிரஜாபதி சொன்ன ஆணையை ஏற்று செயல்படுத்தினார். பிரஜாபதியான தட்சன் நடத்தும் வேள்வியில் கலந்து கொள்ள வானுலகத்தில் உள்ள அனைத்து தேவர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டன.

தட்சனின் அழைப்பை ஏற்று தேவர்கள் வேள்வி நடக்கும் இடத்திற்கு திரளாக சென்றனர். இதையெல்லாம் அறியாத தாட்சாயிணி தேவி ஏன் தேவர்கள் பெரும் திரளாக சென்று கொண்டுள்ளனர் என நந்தியிடம் வினவினார். அதற்கு நந்தி தேவர் தங்களின் தந்தையான பிரஜாபதியான தட்சன் ஒரு மாபெரும் வேள்வியை நிகழ்த்த உள்ளார். அதன் பொருட்டு கலந்து கொள்ளும் வகையில் தேவர்கள் அங்கு சென்று கொண்டு இருக்கின்றனர் என்று கூறினார்.

இதை அறிந்த தாட்சாயிணி தேவி தன் தந்தை எனக்கும் அவரின் மருமகனான சிவபெருமானுக்கும் எவ்வித அழைப்பும் விடுக்காமல் வேள்வி நடத்துவது சிறப்பல்ல என்று கூறி தன் தந்தையிடம் இதை பற்றி கேட்க வேண்டும் என எண்ணி தன் தந்தையை காண வேண்டி தன் பதியான சிவபெருமானிடம் சென்று தன் தந்தையை கண்டு வருவதாக கூறினார்.

தாட்சாயிணி தேவி தன் தந்தையை காண வேண்டி தன் பதியான சிவபெருமானிடம் சென்று தன் தந்தையை கண்டு வருவதாக கூறினார். ஆனால், சிவபெருமான் உன் தந்தையான பிரஜாபதியை காண செல்ல வேண்டாம். இதை இவ்வாறு விட்டு விடுவதே நன்று என கூறினார்.

இதற்கான காரணத்தை அறியாமல் இருப்பதே நன்று என கூறி தேவியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், தேவியோ அதை ஏற்க மறுக்காமல் தன் தந்தையை கண்டு வருகிறேன் என்று கூறி கைலாய மலையில் இருந்து கிளம்பினார்.

சிவபெருமான் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் தன் தந்தை தவறான பாதையில் செல்வதை கண்டு அமைதியாக இருப்பதென்பது முறையன்று. நான் அவர் வளர்க்கும் வேள்வியில் கலந்து கொள்ளவில்லை மாறாக அவரின் தவறினை சுட்டிக்காட்டவே செல்கிறேன் என்று தாட்சாயிணி தேவி கூறினார்.

அதற்கு தேவியே! நீர் எவ்விதம் உரைத்தாலும் உன் தந்தையான பிரஜாபதி உன்னை ஏற்க மாட்டார் என்றும், தேவையில்லாமல் அங்கு சென்று அவமானப்படாதே என்றும் கூறினார்.

அதை ஏற்காமல் தன் தந்தையின் பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என பிடிவாதம் கொண்டார். நிகழ்பவையாவாக இருப்பினும் அதை அவரவர் விதிப்படி நடந்தாக வேண்டும் என்பதை அறிந்த சிவபெருமான் சென்று வா என வெறுப்புடன் கூறினார்.

கைலாய மலையில் இருந்து தாட்சாயிணி தேவி தன் தந்தையை காண சென்றார். ஆனால், தன்னுடைய மற்ற மகள்களை அன்புடன் வரவேற்ற தட்சன், தாட்சாயிணி தேவியை மட்டும் கண்டும் காணாமலும் வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார்.

தந்தையே... தந்தையே... என கூறி தந்தையை பின் தொடர்ந்து வேள்வி நடக்கும் இடத்திற்கு தாட்சாயிணி தேவி சென்றார்.

வேள்வியின் நுழைவாயிலில் நுழைந்ததும் பிரஜாபதியான தட்சன் தன் அன்பு மகளான தாட்சாயிணி தேவியை மென்மேலும் மனம் வருந்தங்கூடிய பல விதமான சொற்களால் பலரின் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தும் விதமாக பேசினார். அதுவரை பொறுமை காத்தார் தாட்சாயிணி தேவி.

பல அவமானங்கள் நடந்தாலும் சிவனை அழைக்காமல் இவ்வாறு வேள்வி நடத்துவது என்பது உசிதம் அல்ல என்று கூறியும் அவர் அதை ஏற்காமல் மிகுந்த சினத்துடன் பேசி அவ்விடத்தில் இருந்து தட்சன் விலகினார்.

இனியும் தன் தந்தையிடம் எடுத்து கூறி சிவபெருமானை அழைக்க சொல்லலாம் என எண்ணிய எண்ணம் ஈடேறுவது என்பது கடினம் என்று உணர்ந்த தாட்சாயிணி தேவி தன் பதியிடம் செல்ல முற்பட்டார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக