புதிய ஆண்டு தொடங்கியவுடன், ஸ்மார்ட்போன்
நிறுவனங்கள் அதன் சில பழைய ஸ்மார்ட்போன்களின் மீது விலைக்குறைப்புகளை அறிவிப்பது வழக்கமான
ஒன்றுதான். ஆனால் வழக்கத்திற்கு மாறான விடயம் என்னவென்றால், 2020 ஆம் ஆண்டு தொடங்கி
முழுதாக ஒரு மாதம் கூட முடியவில்லை அதற்குள் மிகவும் பிரபலமான நிறுவனங்களின் 13 ஸ்மார்ட்போன்களின்
மீது அட்டகாசமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகள் என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?
எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.
01. சாம்சங் கேலக்ஸி எஸ் 10
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.16,100 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.54,900 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளே மற்றும் 16MP அளவிலான மெயின் கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.02. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 பிளஸ்
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.17,100 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.61,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது எக்ஸினோஸ் 9820 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமையை கொண்டுள்ளது.03. சாம்சங் கேலக்ஸி எஸ் 10இ
இந்த ஸ்மார்ட்டான மீது ரூ.8,000
என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இது ரூ.47,900 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும்
இது 3,100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
04. சியோமி மி ஏ3
இந்த ஸ்மார்ட்டான மீது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது சியோமியின் சமீபத்திய ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இதன் 4 ஜிபி ரேம் மாடல் தற்போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.05. நோக்கியா 6.2
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.3,500 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.06. நோக்கியா 7.2
இந்த ஸ்மார்ட்போன் மெது ரூ.3,100 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது. நோக்கியா 7.2 ஆனது இரண்டு ரேம் வகைகளில் வருகிறது - 4 ஜிபி மற்றும் 6 ஜிபி. முந்தையது ரூ.15,499 க்கு கிடைக்கிறது, அடுத்தது ரூ.17,099 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.07. விவோ இசட் 1 ப்ரோ
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.12,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் வேரியண்ட் இப்போது ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 712 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.08. விவோ இசட் 1 எக்ஸ்
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 1,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.14,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் 6 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.16,990 க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 712 மூலம் இயக்கப்படுகிறது, மேலும் FunTouch OS 9.1 உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.09. ஒப்போ ஏ5 2020 (3 ஜிபி)
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.500 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.11,490 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னதாக ரூ.11,990 க்கு விற்பனையான இந்த ஸ்மார்ட்போன் குவாட் லென்ஸ் கேமராவை வழங்குகிறது மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.10. ஒப்போ கே 1
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் 3,600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 660 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.11. சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ் (64 ஜிபி)
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 எம்பி அளவிலான பிரதான கேமரா கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.12. சாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் (3 ஜிபி)
இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.4 இன்ச் அளவிலான அங்குல எச்டி+ டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.13. சியோமி ரெட்மி கோ
இந்த
ஸ்மார்ட்போன் மீது ரூ.300 வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது
ரூ.4,299 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மெமரி வேரியண்ட்
ஆனது ரூ.4,499 க்கு வாங்க கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக