ஆஞ்சினா என்பது இதயத்தில் ஏற்படும் ஒரு வித வலி
ஆகும். இந்த வலி நமது மார்பெலும்பின் அடிப்பகுதியில் உண்டாகிறது. இது நமது
இதயத்திற்கு போகின்ற இரத்த ஓட்டம் குறைவதால் மார்பில் ஒரு வித அசெளகரியம்
உண்டாகிறது. கரோனரி தமனி குழாயை அடைத்து இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இந்த
ஆஞ்சினா (மார்பு வலி) நோயின் அறிகுறிகள் தீவிர மார்பு வலி ஏற்படுதல், மார்பில் ஒரு
விதமான கணம், மார்பில் ஒரு விதமான இறுக்கம், அழுத்தம் போன்றவை மார்பெலும்புப்
பகுதியில் ஏற்பட்டு வலி உண்டாகிறது. இந்த வலி இரண்டு முதல் 15 நிமிடங்கள் வரை
நீடிக்க வாய்ப்புள்ளது.
கனமான பொருட்களை தூக்கும் போது,
தீவிர உடற்பயிற்சி செய்யும்போது இந்த மாதிரியான வலி உண்டாகலாம். இதன் தீவிரத்தன்மையானது
அதன் வகைகளைப் பொறுத்து மாறுபடுகிறது. பொதுவான மார்பு வலி சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
நம் மனம் ஒரு வித பதற்றத்தில் இருக்கும் போதும் இந்த ஆஞ்சினா நிகழ்கிறது.
இந்த மாதிரியான மார்பு வலி
அதிகரிக்கும் போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதன் மூலமோ அல்லது மருந்து உட்கொள்வதன்
மூலமோ சரியாக்கி விடலாம். ஆனால் இது ஆரம்பகால மாரடைப்பின் அறிகுறி அல்ல. இந்த
மார்பு வலி அரைமணி நேரத்திற்கு மேல் நீடித்தால் குணப்படுத்த இயலாது. மருந்தால் கூட
குணமாகாமல் போய்விடும்.
இதயம்
செயலிழப்பு (ஹார்ட் அட்டாக்)
கரோனரி தமனி இரத்தக் குழாய்களில்
முழுமையான அடைப்பு இருந்தால் ஹார்ட் அட்டாக் நேரிடலாம். இதுவே இந்த தமனியில்
ஏற்படும் திடீர் பிடிப்புகளால் ஆஞ்சினா உண்டாகிறது. இது இதயத்திற்கு செல்லும்
இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. உங்களுக்கு கடுமையான மார்பு வலி இருந்தால் உடனே
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பிடிப்பை கட்டுப்படுத்தாமல் அசால்ட்டாக
விட்டால் பிறகு அதுவே மாரடைப்பை ஏற்படுத்திவிடும். மார்பு வலியை வாயு அல்லது
அஜீரணக் கோளாறு என்று கருதுவது, வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வது
ஆபத்தானது. இந்த ஆஞ்சினா அறிகுறிகள் முற்றிலும் வித்தியாசமானது. அதை நன்கு
உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மை அளிக்கும்.
அறிகுறிகள்
* மார்பு வலி அல்லது அசெளகரியம்
* கைகளில், தோள்பட்டையில், முதுகு
மற்றும் மார்பில் வலி உண்டாகுதல்
* குமட்டல்
* சோர்வு
* மூச்சு விட சிரமம்
* அதிகப்படியாக வியர்த்தல்
* தலைச்சுற்றல்
இதர
அறிகுறிகள்
ஆஞ்சினா அல்லது மார்பு வலி இதய
நோய்களின் பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இதை மார்பு கணத்துப் போகுதல்,
மார்பில் அழுத்தம், மார்பில் வலி, மார்பில் எரிச்சல், பிடிப்பு போன்ற அறிகுறிகள்
மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் சரியாக ஜீரணம் ஆகாமல்
நெஞ்செரிச்சலால் ஏற்படும் வலி என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் ஆஞ்சினா
அல்லது மார்பு வலி ஏற்பட்டால் தோள்பட்டை, கைகள், கழுத்து, தொண்டை, தாடை மற்றும்
முதுகு போன்ற எல்லா இடங்களிலும் வலி பரவும். குறிப்பாக குளிர் காலத்தில் இதை
நீங்கள் நன்றாக உணர முடியும். எனவே மார்பு வலியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல்
உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.
எது
ஆபத்து?
இந்த மார்பு வலி பிரச்சனை பொதுவாக
ஆண்களில் காணப்படுகிறது. அதிலும் புகைபிடிக்கும் ஆண்கள், குடிக்கும் பழக்கம் உள்ள
ஆண்களிடம் காணப்படுகிறது.
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்த
ஆஞ்சினா ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* உயர் இரத்த அழுத்தம் மற்றும்
கொலஸ்ட்ரால் இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.
* உடற்பயிற்சி செய்து எடையை
கட்டுக்குள் வைக்காதவர்களுக்கு இது நிகழலாம்.
* வயதானவர்களுக்கு மரபணு ரீதியாக இந்த
ஆஞ்சினா பிரச்சனை ஏற்படலாம்.
ஆரம்ப
கால சிகச்சைகள்
மார்பு வலி ஏற்பட்டு மாரடைப்பாக
இருந்தால் அதன் அறிகுறிகள் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.
எனவே அந்த சூழ்நிலையில் ஓய்வெடுப்பது, மருந்துகளை சாப்பிடுவது தீர்வளிக்காது. வலி
சிறிது சிறிதாக கூடி தீவிர வலி உண்டானால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள். எல்லா
நேரங்களிலும் வரும் வலி மாரடைப்பு கிடையாது. அதை அமைதியான மாரடைப்பு தொற்று என்று
கூறுவர்.
குறிப்பு
எனவே உங்கள் உடம்பை எப்பொழுதும்
கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள். இதய
ஆரோக்கியத்திற்கு தேவையான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகள், பழங்கள், முழு
தானியங்கள், கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்களை நலமாக வாழ வைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக