
தமிழகத்தில் சட்டப்பேரவை அண்மையில்
நடைபெற்றது. இதில் பல சிறப்பம்சங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர்
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் ரூ.600 கோடி
மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார்.
தற்போது
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240
பேருந்துகளை, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர்
பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். இந்த புதிய பேருந்துகளில் 37
பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை என தெரிவித்தனர். இவை சென்னை மாநகர
போக்குவரத்து கழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 103 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர்
இதையடுத்து திருச்சி மற்றும் தஞ்சை ஊரை மையமாக கொண்டு இயங்கக்கூடிய வகையில் ரூ.10
லட்சம் செலவில் வாங்கப்பட்ட இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமுனை சேவையும்
முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
இந்த
நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்,
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக