Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்!


குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை

மெரிக்காவை தளமாகக் கொண்ட, காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் (என்.சி.எம்.இ.சி), இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு சமூக வலைதளங்களில் 25,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாசப் படம் பதிவேற்றி இருப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு
என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு இந்த அறிவிக்கையை இந்திய தேசிய குற்றப் பதிவு பணியகத்துக்கு அனுப்பியுள்ளது. 1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பு தான் என்.சி.எம்.இ.சி.
லாப நோக்கற்ற அமைப்பு
இந்த அமைப்பானது குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பானது ஏராளமான மென்பொருள்கள், அமைப்புகளின் மூலம் குழந்தைகள் தொடர்பான விவகாரத்தை ஆன்லைனில் பதிவேற்றுவது குறித்து கண்காணிக்கிறது.
குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை
இந்த அமைப்பு குறித்து இந்திய உள்துறை அமைச்சக வட்டாரம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அது, வருடந்தோறும் இந்தியாவில் குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்பிடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.
25,000 குழந்தைகள் ஆபாசப்படம்
இந்த நிலையில் என்.சி.எம்.இ.சி அமைப்பு ஜனவரி 23 ஆம் தேதி வரையிலான இந்திய குழந்தைகள் பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜனவரி 23 ஆம் தேதிவரை, கடந்த ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் தான் அதிகம்
இதிலும் இந்த பதிவேற்றமானது டெல்லியில் தான் அதிகம் நடந்துள்ளதாக என்.சி.எம்.இ.சி அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அது அரங்கேறியுள்ளது.
பதிவேற்றம் குறித்து விசாரணை
இந்த புகார் குறித்து மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரி தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், பதிவேற்றம் செய்யப்பட்ட இடம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாகவே 7 எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Operation Black face
அதேபோல் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மட்டுமின்றி டெல்லி, குஜராத், கேரளா போன்ற பகுதிகளில் சைபர் கிரைம் பிரிவி போலீஸார்கள் சிலரை கைது செய்துள்ளனர்.
சமூகத்தின் கடமை
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தாலும், இதுபோன்ற செயல் இந்தியாவில் நடப்பது என்று மன வருத்தத்தை தரத்தான் செய்கிறது. குழந்தை துன்புறுத்தல் என்றவுடன் பெண் குழந்தைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அனைவருக்கும் தோன்றுகிறது ஆனால் இதில் குழந்தைகள் என்ற சொல் ஆண் குழந்தைகளையும் குறிக்கும். ஒவ்வொரு வீட்டில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பது அவரவர் பெற்றோர்களின் கடமைகள் மட்டுமின்றி இந்த சமூகத்தின் கடமையும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக