Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 14


  இறுதியில் தன் மனைவியான தாட்சாயிணியின் உடலை ஏந்திய அந்த கணத்தில் சிவபெருமான் எழுப்பிய சத்தத்தில் இந்த அண்ட பிரபஞ்சங்களே ஸ்தம்பித்துப் போயின. பின், திருமால் சிவபெருமானிடம் இனி யாவையும் மாற்ற இயலாது பிரபு என்று கூறினார்.

திருமாலின் கூற்றில் இருந்த உண்மையை அறிந்த சிவபெருமான் தாட்சாயிணியின் உடலை ஏந்தியவாறு அனைத்து லோகங்களுக்கும் அலைந்தார். சதியின் உடலானது இவர் கையில் இருக்கும் வரை இவரால் எதையும் செய்ய முடியாது என்று உணர்ந்த திருமால் தனது சக்ராயுதத்தால் சதியின் உடலை தகர்கின்றார்.

சக்ராயுதத்தால் தளர்ந்த உடற்கூறுகள் இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு இடங்களில் விழுகின்றன. சதியின் உடற்கூறுகளை கைப்பற்ற எம்பெருமானும் அவ்விடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கின்றார்.

ஒரு பித்தனை போல் சதியின் நினைவுகளோடு அவர்களின் உடற்கூறுகளை கண்டறிந்து அதை பாதுகாக்கும் பொருட்டு இந்த பூலோகத்தில் அலைகிறார். சதியின் உடற்கூறுகளை ஒவ்வொன்றாக கண்டறிந்து அதை காக்கும் பொருட்டு சக்தி பீடங்களாக மாற்றி ஒவ்வொரு சக்தி பீடங்களுக்கும் காவலாளியாக ஒரு பைரவரை சிவபெருமான் தோற்றுவிக்கிறார்.

இவ்வாறு தாட்சாயிணி தேவியின் உடற்கூறுகள் 51 இடங்களில் விழுந்துள்ளன. அந்த 51 இடங்களும் சக்தி பீடங்களாகவும், மக்கள் வணங்கும் திருத்தலங்களாகவும் உள்ளன.

சிவபெருமானால் உருவாக்கப்பட்ட பைரவர்களால் இன்று வரை காக்கப்பட்டு வரும் சக்தி பீடங்கள் பின்வருமாறு :

01. காஞ்சிபுரம் - தமிழ்நாடு
02. மதுரை - தமிழ்நாடு
03. கன்னியாகுமரி - தமிழ்நாடு
04. கோடித்தீர்த்தம் - ஆந்திரா
05. ஸ்ரீசைலம் - ஆந்திரா
06. திருச்சானூர் - ஆந்திரா
07. வாராங்கல் - ஆந்திரா
08. மைசூர் - கர்நாடகம்
09. வனகுண்டி - கர்நாடகம்
10. ஜகந்நாதபுரி - ஒரிஸா
11. கோலாப்பூர் - மஹாராஷ்டிரா
12. நாஸிக் - மஹாராஷ்டிரா
13. துளஜாப்பூர் - மஹாராஷ்டிரா
14. மாஹூர்தட் - மஹாராஷ்டிரா
15. அம்பாஜி - குஜராத்
16. பாவாகட் - குஜராத்
17. பரோடா - குஜராத்
18. உஜ்ஜயினி - மத்தியபிரதேசம்
19. விந்திய மலை - மத்தியபிரதேசம்
20. காளிகட் - மேற்கு வங்காளம்
21. நலஹத்தி - மேற்கு வங்காளம்
22. பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம்
23. புஷ்கர் - ராஜஸ்தான்
24. பைராட் - ராஜஸ்தான்
25. காசி - உத்திரப்பிரதேசம்
26. சித்திரகூட் - உத்திரப்பிரதேசம்
27. நைமிசாரண்யம் - உத்திரப்பிரதேசம்
28. அலகாபாத் - உத்திரப்பிரதேசம்
29. மதுரா - உத்திரப்பிரதேசம்
30. கனக்புர் - பீஹார்
31. பரலி - பீஹார்
32. சாசாரம் - பீஹார்
33. பாட்னா - பீஹார்
34 ஷில்லாங் - மேகாலயா
35. ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா
36. குரு க்ஷேத்ரம் - ஹரியானா
37. ஜ்வாலாமுகி - ஹிமாசல பிரதேசம்
38. ஹிமாசலம் - ஹிமாசல பிரதேசம்
39. கௌஹாத்தி - அஸ்ஸாம்
40. ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர்
41. வைஷ்ணவ தேவி - ஜம்மு காஷ்மீர்
42. கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர்
43. ஷிகார்புர் கிராமம் - பங்காளதேஷ்
44. பவானிபர் - பங்காளதேஷ்
45. சீதாகுண்ட் - பங்காளதேஷ்
46. ஜேஸார் டவுண் - பங்காளதேஷ்
47. ஹிங்லாஜ் - பாகிஸ்தான்
48. காட்மாண்டு - நேபாளம்
49. கண்டகி - நேபாளம்
50. கைலாஸ் - திபேத்
51. இலங்கை

சிவனின் நிலையினை கண்டு திருமால் தாட்சாயிணி தேவியின் உடலை தனது சக்ராயுதத்தால் சிறு துண்டுகளாக பிளவுறச் செய்தார். சிவனும் தாட்சாயிணியின் உடற்கூறுகளை கண்டறிந்து அதை சக்தி பீடங்களாக மாற்றினார். அந்த பீடங்களை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு பைரவர்களையும் காவலாக நியமித்தார்.

தாட்சாயிணி தேவியின் நினைவுகளோடு இந்த சிருஷ்டியில் பித்தனாக சுற்றித் திரிந்தார். எங்கும் எதிலும் தாட்சாயிணி தேவியின் நினைவுகளே நிரம்பி இருந்தன. எம்பெருமானான சிவபெருமான் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தார்.

தாட்சாயிணி இறந்து விட்ட செய்தியை அறிந்த தாரகாசுரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் சிவபெருமான் நிலை என்னவென்று தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த தாரகாசுரன் மிகவும் இன்புற்றான். தன்னுடைய மரணம் பற்றிய பயத்தில் இருந்து தெளிவு பெற்று புத்துணர்ச்சியுடன் இருந்தான்.

சிவபெருமான் கைலாய மலையில் தாட்சாயிணி தேவியின் நினைவுகளுடன் இருக்கவே என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார். அனைத்தும் அறிந்த எம்பெருமான் தன்னுடைய தனிமையை போக்கி தன்னுடன் இருந்த இல்லத்தாள் இல்லாததால் தாம் படைத்த இந்த சிருஷ்டியை பற்றி கவலை கொள்ளாமல் இருந்தார்.

மேலும் கைலாய மலையில் தாட்சாயிணி தேவியுடன் இருந்த நினைவுகள் மேலும் மேலும் நினைவுக்கு வர தன்னுடைய யோக நிலையை அடைய முடியாமல் இருந்தார். தாட்சாயிணி தேவி இல்லாத சிவபெருமான் யோகி ஆவார். எனவே தான் என்றும் அழிவு இல்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கை தாரகாசுரனுக்கு பிறந்தது.

அழிவில்லா வாழ்பவனான நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான். பின்பு மூவுலகையும் கைப்பற்றி அதில் தானே அரசனாக என்றும் இருக்க வேண்டுமாறு முடிசூட்டிக் கொண்டு ஆள வேண்டும் என்று எண்ணினான்.

தேவர்கள் சிவபெருமானின் இந்த நிலையை கண்டு மனம் கொள்ளாமல் திருமாலிடம் சென்று முறையிட்டனர். காப்பவரான திருமாலும் இவையாவும் நிகழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதை யாராலும் மாற்ற இயலாது என்று உரைத்தார்.

மேலும், தேவர்கள் திருமாலிடம், பிரபுவே சிவபெருமானின் புத்திரர்களால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் பெற்ற தாரகாசுரன் இனி என்ன செய்வானோ என்று வினவினார். திருமாலோ காலம் விரைந்து பதில் உரைக்கும் என்று கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக