Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

கொரோனா வைரஸ் :சீனாவில் இருந்து இரவோடு இரவாக 200 பேர் அமெரிக்காவிற்கு சென்றனர்.!

கொரோனா வைரஸ் :சீனாவில் இருந்து இரவோடு இரவாக 200 பேர் அமெரிக்காவிற்கு சென்றனர்.!


சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக நேற்று இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர். சீன மாகாணம்  வுஹானிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு அலாஸ்காவில் உள்ள டெட் ஸ்டீவன்ஸ் ஏங்கரேஜ் சர்வதேச விமான நிலையத்தில் சென்றது.
பின்னர் அங்கு இருந்து விமானம் எரிபொருள் நிரப்பி கொண்டு கலிபோர்னியாவின் ரிவர்சைடு அருகே மார்ச் ஏர் ரிசர்வ் தளத்திற்கு சென்றது.சீனாவில் இருந்து புறப்படுவதுற்கு முன்பே அவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகளை நடத்திய பின்னரே அனைத்து பயணிகளும் கலிபோர்னியாவுக்கு அழைத்து வந்ததாக அலாஸ்கா அதிகாரிகள் கூறினர்.
கலிபோர்னியாவில் 200 பேருக்கும் அதிக சுகாதாரத் நிலையங்கள் அமைத்து அனுபவம் வாய்ந்த  மருத்துவர்கள் நேரடியாக கண்காணித்து வருவதாக அலாஸ்காவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அன்னே ஜிங்க் கூறினார். மேலும் “அமெரிக்காவிற்கு வந்த 200 அமெரிக்கர்களை  வருக” என்று மருத்துவ குழுவினர் கூறினர்.
சீனாவில் கொரோனா வைரஸ் இதுவரை 132 பேரைக்  கொன்று உள்ளது. மேலும்  6,000 பேரை பாதித்துள்ளது.அவர்களில் பெரும்பாலோர் வுஹான் நகரை சார்ந்தவர்கள்.  அமெரிக்காவில் இந்த நோய் இதுவரை 5 பேரை பாதித்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக