Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 ஜனவரி, 2020

2 ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த சென்னை இளைஞர் கைது!

டந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குழந்தைகள் ஆபாச படங்களை டவுன்லோட் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் இந்த தவறு செய்பவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே போலீசார் எச்சரித்து உள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் தனது மொபைல் போனில் குழந்தைகள் ஆபாச படம் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்த இளைஞரை விசாரணை செய்த போலீசார்அந்த இளைஞரின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்ததில் அதில் பல குழந்தைகள் ஆபாச படங்கள் வீடியோ இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்திலிருந்து குழந்தைகள் ஆபாச படங்களை டவுன்லோட் செய்ததாக கூறப்படுகிறது

இதனை அடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!