தொழில்நுட்பங்கள் வளரும் காலக்கட்டத்தில்
அனைத்து தகவல்களும் போன்கால் மூலமாகவும், செல்போன் மெசேஜ் மூலமாகவும் தகவல்
பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பல்வேறு
தகவல்களும் தபால் மூலமாகவே பரிமாறப்பட்டு வந்தது.
செல்போன்
வழியாக மெசேஜ்கள்
காலம் வளர வளர பெரும்பாலான கடைகள்
மற்றும் வீடுகளில் லேண்ட்லைன் போன் வந்தது. அடுத்தக்கட்டமாக அனைவரது கையிலும்
செல்போன் வந்தது. இதன்மூலம் பல்வேறு தகவல்களும் செல்போன் வழியாக பறிமாரப்படுகிறது.
முக்கியமான தகவல்கள் இமெயில் மூலம் அனுப்பப்படுகிறது.
சாப்ட்
காப்பி, ஹார்ட் காப்பி
இருப்பினும் சாப்ட் காப்பி, ஹார்ட்
காப்பி என்ற வார்த்தை இருக்கத்தான் செய்கிறது. சாப்ட் காப்பி எனப்படும் மெயில்
வழியான தகவல்கள் முக்கியம் என்றாலும், ஹார்ட் காப்பி பயன்பாட்டுக்கு தபால்
அனுப்பத்தான் செய்ய வேண்டும். முக்கிய நிறுவனத்தின் கடிதங்கள், வங்கி படிவம்
மற்றும் பத்திரங்கள், வங்கி கடன் தொடர்பான கடிதங்கள் உள்ளிட்ட பலவகையும் தபால்
மூலமாகவே அனுப்பப்பட்டு வருகிறது.
தபால்காரர்
செய்த வேலை
அனுப்பப்படும் கடிதங்கள் வீடுகளை
தேடிக் கொண்டு கொடுப்பதோடு அவர்களின் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொள்வது என்பது
தபால்காரரின் பிரதான வேலையாகும். இந்த நிலையில் ஜப்பானின் டோக்யோ அருகேயுள்ள கனகவா
பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
24
ஆயிரம் தபால்களை ஒளித்து வைத்த தபால்காரர்
தபால் காரரை கைது செய்ததற்கான காரணம்
குறித்து போலீஸார் தெரிவிக்கையில், 61 வயதான அந்த தபால்காரர் 2003 ஆம் ஆண்டு முதல்
பல தபால்களை பதுக்கி வைத்துள்ளார் எனவும் பல கடிதங்களை காணவில்லை என ஜப்பான்
தபால்துறை நடத்திய விசாரணையில் இந்த ஓய்வு பெற்ற தபால்காரர்க சிக்கியதாக
தெரிவிக்கின்றனர். அதோடு அவரது வீட்டில் சுமார் 24 ஆயிரம் தபால்களை குவித்து
வைத்துள்ளாராம்.
தேடிக்
கொடுக்க சோம்பேறித்தனம்
கைது செய்த ஓய்வு பெற்ற தபால்காரரிடம்
போலீஸார் விசாரணை மேற்கொள்கையில் வீடுகளை தேடிக் கண்டுபிடித்து கொடுக்க சிரமமாக
இருந்ததால் 24 ஆயிரம் கடிதங்களை வீட்டிலேயே வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கடிதங்களை வீடு தேடி கொடுக்கமுடியவில்லை என்று தெரிவித்தால் தன்னை
திறனற்றவர் என்று சக ஊழியர்கள் நினைத்துவிடுவார்கள் என்பதால் இந்த வேலையை
பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
3
ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை, அபராதம்
இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று
வருகிறது இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தபால்காரருக்கு சுமார் 3
ஆண்டுகளுக்கு குறைவான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என போலீஸார்
தெரிவிக்கின்றனர். மேலும் தபால்காரரிடம் இருந்து எடுக்கப்பட்ட 24 ஆயிரம்
கடிதங்களும் மன்னிப்பு கேட்கப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக