Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 25 ஜனவரி, 2020

வங்கியில் கணவனை டெபாசிட் செய்ய முயன்ற மனைவி...

ங்கியில் செல்லானில் ஆயிரம் என்பதற்கு பதிலாக கணவன் என மனைவி எழுதி கொடுத்த ரூசிகர சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
வங்கிகளில் பணம் சேமித்து வைக்கலாம், கடன்வாங்கலாம். நாம் வீட்டில் அதிக விலை மதிப்புள்ள பொருட்களை பெட்டகத்தில் பத்திரப்படுத்தலாம். ஆனால் சமீபத்தில் ஒரு பெண் தன் கணவரை வங்கியில் சேமிக்க முயன்ற ருசிகர சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

வங்கிக்குப் பணம் செலுத்தச் சென்ற பெண் அங்குள்ள செல்லானில் ரூ 1500 செலுத்துவதற்காக நிரப்பும் போது One Thousand and Five Hundred only என்று எழுதுவதற்குப் பதிலாக One Husband and Five Hundred only என எழுதி வங்கி ஊழியரிடம் கொடுத்துள்ளார்.

இதைப் படித்தவுடன் வங்கி ஊழியர் அதிர்ந்து போய்விட்டார். பின்னர் அந்த பெண் செய்த தவறை புரிந்து கொண்டு அதை அவரிடம் சுட்டிக்காட்டித் திருத்தி எழுதி வரச் சொன்னார். அதைப் பார்த்ததும் மற்றவர்கள் சிலர் கணவன் தொலைந்து போகாமல் இருக்க வங்கியில் கணவனைச் சேமிக்க நினைத்திருப்பார் போல எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!