Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஒரு வருடமாக சீரழித்தனர்... கர்ப்பிணி பெண்ணின் அதிர்ச்சி புகார்..! 2 பேர் மீது வழக்கு..

திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்பமாக்கிய வழக்கில் இரண்டு பேர் மீது ஜார்கண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெய்சல்மர் சிட்டியில் தாய் தந்தையுடன் வசித்து வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலத்காரம் செய்து வந்ததாக வாலிபர்கள் இருவர் மீது மொஹங்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

ஜார்கண்ட் மாநிலத்தை சேந்தவர் மோனி (23). இவருக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மோனி தனது பெற்றோருடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசித்து வந்தார். இவரது பெற்றோர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் வேலைக்கு சென்ற பின்பு மோனி வீட்டில் தனியாக இருப்பார்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ரஷீத் கான் மற்றும் அவருடைய நண்பரும் மோனியிடம் நட்பாக பேசி பழக ஆரம்பித்தனர். பின்னர் ரஷீத் கான் மோனியை பாலியல் வலையில் விழ வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ரஷீத் கான் மோனியை மிரட்டி, தன்னுடைய நன்பனுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.
 
அதன் தொடர்ச்சியாக இருவரும், மோனி வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் அவரை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். இதனால் 9 மாத கர்ப்பமாக இருக்கும் மோனி மொஹான்கர் காவல் நிலையத்தில் இரு வாலிபர்கள் மீதும் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர்.

கடந்த வருடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வழக்குகள் எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக காவல்துறை அதிர்ச்சி புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அம்மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு 3,305 கற்பழிப்பு வழக்குகளும், 2018 இல் 4,335 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டில் 5,997 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் போக்சோ சட்டத்தின் கீழ் 22 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக