Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

100க்கும் அதிகமான பெண் சிசுக் கொலை; தமிழகத்தை உலுக்கும் ஸ்கேன் சென்டர்- அதிர்ச்சி பின்னணி!

 

 ராளமான பெண் சிசுக் கொலைகளை அரங்கேற்றி இருப்பதாக ஸ்கேன் சென்டர் மீது எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலினத் தேர்வு தடுப்புச் சட்டம் 1994-ன்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்வது குற்றம். அதையும் மீறி முயற்சித்தால் கடும் தண்டனை வழங்கப்படும். பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அதனை கொன்றுவிடும் எண்ணம் இன்னும் அணையா தீயாய் சில இடங்களில் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டர் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இங்கு 100க்கும் அதிகமான கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக அதிகாரிகள் கூறுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டர் ஒன்றில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிவிக்கப்படுவதாக தகவல் பரவியது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுகாதாரத்துறைக்கு ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் ரகசிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி கர்ப்பிணி ஒருவர் அந்த ஸ்கேன் சென்டருக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கம் போல் அவருக்கு ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும், மருத்துவ பரிசோதகருமான சிவசங்கரன் பரிசோதனை செய்துள்ளார்.
 
அப்போது அப்பெண்ணின் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்ற தகவலை வெளிப்படையாக சொல்லி அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இதுபற்றி சுகாதாரத்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அந்த சென்டருக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஸ்கேன் சென்டர் மற்றொரு மருத்துவரின் பெயரில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சிவசங்கரன் எந்தவித மருத்துவப் படிப்பும் படிக்காமல் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து வந்துள்ளார்.

அந்த சென்டரில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் கலைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அடுக்கடுக்காக அதிர்ச்சிகர தகவல்களை கூறுகின்றனர். இந்நிலையில் ஸ்கேன் சென்டரில் இருக்கும் இயந்திரங்களை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக