Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

தெரியுமா? உங்க செல்பீயை வைத்து நீங்களே வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ரெடி பண்ண முடியும்! அட இது தெரியாம போச்சே!

 
 
வ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் அதே 'ப்ரீசெட்' நியூ இயர் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள், கிறிஸ்துமஸ் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் மற்றும் பொங்கல் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை வாழ்த்துக்களாக அனுப்பி அனுப்பி சலித்து விட்டதா?
போர் அடிக்கும் "அதே" வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள்!
இதை அனுப்புவதற்கு பதிலாக பழையபடி அஞ்சல் அட்டைகளை வாங்கி, விலாசத்தோடு சேர்த்து நான்கு வரி கவிதைகளை எழுதி தபாலில் வாழ்த்துக்கள் அனுப்புவதே மேல் என்கிற நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களா? ஆம் என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஒருகாலத்தில் 'மெசேஜிங் டிரெண்ட்' என்று கூறப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் இப்போது மிகவும் 'போர்' ஆன ஒன்றாகி விட்டது. இந்த இடத்தில் தான் 'கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள்' (Custom WhatsApp Stickers) தலைதூக்குகிறது, நமக்கு கைகொடுக்கிறது.

என்ன கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களா? அப்படியென்றால் என்ன?
மிகவும் எளிமையாக கூற வேண்டும் என்றால், கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் என்றால் நீங்களாகவே உங்களுக்கான வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்குதல் ஆகும். இதை உருவாக்குவதும் மிகவும் எளிது; நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு புகைப்படத்தைத் தேர்வுசெய்து, அதன் பின்னணியை (அதாவது பேக்கிரவுண்ட்டை) டெலிட் செய்து ஸ்டிக்கர்களை உருவாக்குவது மட்டுமே.
கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?
ஆக இனிமேல் புத்தாண்டு என்றாலும் சரி, பொங்கல், ரமலான் அல்லது கிறிஸ்துமஸ் என்றாலும் சரி வழக்கமான வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவதற்கு பதிலாக நீங்களே உருவாக்கிய கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை வாழ்த்துக்களாக அனுப்புங்கள். அப்படியான கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களில் ஒன்றை உருவாக்க நீங்கள் தயாராக இருந்தால், இதோ கீழே தொகுக்கப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு நேரடியாக, ஐபோன் பயனருக்குக் மறைமுகமாக!
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்க, அதாவது ஐஓஎஸ் பயனர்களால் இதை உருவாக்க முடியாது. இருப்பினும் ஐபோன் பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நண்பர்களை கஸ்டம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்க சொல்லி, அவர்கள் ஸ்மார்ட்போனில் இருந்து உங்கள் ஐபோனுக்கு ஷேர் செய்து கொள்ளலாம், பின்னர் நீங்களே அவைகளை ஷேர் செய்யலாம்.
உங்கள் செல்பீயை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்றும் வித்தை!

-- இதைச் செய்ய, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 'Background Eraser' எனும் ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும்.
-- பின்னர் நீங்கள் ஸ்டிக்கராக பயன்படுத்த விரும்பும் ஒரு புகைப்படத்தையும் தேர்வு செய்யவும் அது உங்களின் செல்பீயாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு புகைப்படமாக கூட இருக்கலாம்.
-- இப்போது Background Eraser ஆப்பை திறந்து நீங்கள் தேர்ந்தெடுத்த புகைபிபடத்தை Open செய்யவும்.
-- இப்போது குறிப்பிட்ட புகைப்படத்தில் பேக்கிரவுண்டை (பின்னணியை) அழித்து, பின்னர் அதை சேமிக்கவும்

குறைந்தபட்சம் மூன்று ஸ்டிக்கர்கள் வேண்டும்!


இதே வழிமுறையை பயன்படுத்தி குறைந்தது மூன்று ஸ்டிக்கர்களையாவது உருவாக்கவும். ஏனெனில் வாட்ஸ்அப் ஆனது மூன்று படங்களுக்கும் குறைவான ஸ்டிக்கர் பேக்கை ஆட் செய்ய அனுமதிக்காது. சரி இப்போது வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை ஆட் செய்வது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்!
உருவாக்கிய ஸ்டிக்கரை ஆட் செய்வது எப்படி?
-- நீங்கள் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கி முடித்த பிறகு, Personal Stickers For Whatsapp என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
-- இந்த ஆப் ஆனது நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாகவே கண்டறியும், பின்னர் அதை வாட்சஅப்பில் இணைக்க 'ஆட்' பொத்தானை கிளிக் செய்யவும்.
-- இதற்குப் பிறகு, வாட்ஸ்அப்பில் விருப்பப்பட்ட சாட் விண்டோவை திறந்து ஸ்டிக்கர்கள் பகுதிக்குச் செல்லுங்கள். நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களைத் தேடி, அதை அன்பிற்குரியவர்களுக்கு அனுப்பவும், அவ்வளவுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக