Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 34



 சிவபெருமான் சினம் கொண்டு, நந்தியே! யார் உமக்கு அன்னையாவார் என்று சினத்துடன் உரைக்க, நந்தி தேவரோ இவ்வுலகை படைத்து சர்வத்தையும் தன்னுள் அடக்கி சர்வேஸ்வரராக விளங்கும் தங்களை மணம் செய்து கொள்ளப் போகும் பார்வதி தேவியே அனைவருக்கும் அன்னையாவார் என்று கூறினார்.

நான் எப்போதும் யோகியாக இருக்க விரும்புகிறேன். என்னை மணம் செய்து கொள்ள வேண்டுமாயின் பல சோதனைகளை கடந்து வெற்றி கொண்டால் மட்டுமே தேவி பார்வதியை என்னால் மணம் செய்ய இயலும். அந்த சோதனைகள் யாவும் கடினமானவையாக இருக்கும் என்று கூறினார்.

பார்வதி தேவி, வனத்தில் குடில் அமைத்து அங்குள்ள மரக்கன்றுகள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி அங்குள்ள பறவைகளுக்கு உணவளித்து விட்டு லிங்கம் செய்வதற்காக தண்ணீரை எடுத்து வர ஆயத்தமானார்.

உடனிருந்த தோழிகள், தேவி! நாங்கள் சென்று எடுத்து வருகிறோம். எங்கிருந்து எடுத்து வர வேண்டும் என்று கூறினால் போதும் என்றார்கள். மேலும், பாதைகள் யாவும் சீரானதாக இல்லை எனவும் எடுத்துரைத்தனர்.

ஆனால், தேவியோ நீங்கள் அளிக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றி. ஆயினும் இது என் வாழ்க்கை வேண்டி நான் ஏற்ற பணிகள் யாவையும் நானே செய்தல் என்பதே உசிதமானதாகும், என்று பார்வதி தேவி தன் தோழிகளிடம் கூறிவிட்டு கைலாய மலையில் உள்ள புனிதமான நதி தோன்றும் இடத்தை தேடி தனது பயணத்தை தொடர்ந்தார்.

தாரகாசுரன் தனது குருவான சுக்கிராச்சாரியாரை கண்டு நிகழ்பவை யாவும் விசித்திரமாக உள்ளது குருவே என்று கூறினான். எந்த நிகழ்வுகள் உமக்கு விசித்திரமாக உள்ளது என குரு கேட்டார்.

அதற்கு தாரகாசுரன் தேவர்கள் அநேகம் நபர்களை நான் சிறை பிடித்தாலும் சிலர் மட்டுமே வெளியில் உள்ளனர். அந்த சில நபர்கள் இவர்களை காக்கவும், மீட்கவும் எவ்விதமான பணியையும் செய்யவில்லை.

மேலும் இந்திரன், அக்னி தேவர் முதலானோர் எங்கு உள்ளார்கள் என்பதையும் அறிய முடியவில்லை குருவே. இதற்கு தாங்கள் தான் ஏதாவது உபாயம் சொல்ல வேண்டும் எனக் கூறி பணிந்து நின்றார்.

பார்வதி தேவி, தனது தோளில் ஒரு மூங்கிலை வைத்து அதன் இருபுறங்களிலும் இரு பானை வைத்து தனது பயணத்தை தொடங்கினார். பல இன்னல்கள் அடைந்து, அதாவது இதுவரை பல பயணங்களை மேற்கொண்டாலும் அதில் சௌந்தர்யத்துடன் சென்று வந்த தேவி இப்பயணத்தில் எவ்விதமான சௌந்தர்யமும் இல்லாமல் தனியாகவே தனது பயணத்தை தொடர்ந்து இறுதியில் புனித நதியை கண்டார்.

அளவற்ற மகழ்ச்சியுடன் அந்நதியில் இருந்து நீரை எடுத்து செல்லலாம் என எண்ணி மூங்கிலில் உள்ள பானைகளை எடுத்து புனித நதி தோன்றும் இடத்திற்கு அருகில் சென்றதும் பனிகள் விலகி ஒரு மாய தோற்றம் உண்டாயிற்று. அந்த மாயையில் சதி தேவியும், சிவபெருமானும் மட்டுமே இருந்தார்கள்.

சக்கரங்கள் என்றால் என்ன?

உயிர் வாழும் ஒவ்வொரு ஜீவனுள்ளும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை இயக்கங்கள் நடைபெற வேண்டுமாயின் பல விதமான வேதியியல் மாற்றங்கள் நம் உடலினுள் நிகழ்கின்றன.

இம்மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறவும், நாம் உயிர் வாழ ஏதுவான மாற்றங்கள் நிகழவும் அடிப்படையாக இருப்பது சக்தி ஆகும். இச்சக்தியையே நாம் உயிர் சக்தி என்று அழைக்கிறோம்.

இவ்விதமான உயிர் சக்தியை தோற்றுவிக்கும் வல்லமை கொண்டவையே நமது உடலில் இருக்கும் சக்கரங்கள் ஆகும்.
அந்த மாயையில் சதி தேவி திருமணம் முடிந்து கைலாய மலையில் குளிக்க வருகையில் நாற்புறமும் திறந்த அமைப்பாக இருந்ததை எண்ணி என்ன செய்வது என யோசித்த கணத்தில் அங்கு திடீரென பனிகள் யாவும் கூடி கரையின் மறுமுனையில் என்ன நிகழ்வது என்று தெரியாத வண்ணம் அனைத்தும் மறைந்தன.

என்ன நிகழ்கின்றது என அறிவதற்குள் சிவபெருமான் தன் கையில் தன் மனைவியான சதி தேவி உடுத்துவதற்கான ஆடைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தார். அவரை கண்டதும் சதி தேவி அவரிடம் உள்ள ஆடைகளை வாங்கி இப்பணிகளை தாங்கள் புரிவது என்பது உசிதமானதல்ல என்று கூறினார்.

ஆனால், சிவபெருமானோ என்னுள் பாதியாக இருக்கும் உமக்கு நான் செய்யாமல் எவர் செய்ய இயலும் தேவி என்று கூற, தேவி சிவபெருமானை அரவணைத்துக் கொண்டார். இந்நிகழ்வுகள் யாவும் பார்வதி தேவிக்கு மாயையாக தோன்றி மறைந்தன. மாயை மறைந்ததும் சுய நினைவிற்கு வந்த தேவி இந்நிகழ்வுகளை எண்ணி மகிழ்ந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக