மாயை மறைந்ததும் சுய நினைவிற்கு வந்த தேவி இந்நிகழ்வுகளை எண்ணி மகிழ்ந்தார். அந்த சமயத்தில் நந்தி தேவர் அங்கு வந்து தேவியை பணிந்து நின்றார்.
நந்தி தேவரோ! தாங்கள் விரைந்து கைலாயம் வர வேண்டும் என கூறினார். பார்வதி தேவி என் கணவரான சிவபெருமானுடன் விரைவில் கைலாய மலைக்கு வருகிறேன் என்று கூறி கைகளில் தண்ணீர் பானைகளை ஏந்தி புனித நதியின் அருகில் செல்ல முற்பட்டார்.
அந்த சமயத்தில் நந்தி தேவர் தாம் தண்ணீர் கொண்டு வருவதாக கூறி பானையை வாங்க முற்படுகையில், நந்தி தேவரே! இப்பயணம் எனக்கான பயணமாகும் என்று கூறினார். இதில் எவர் உதவியும் இன்றி சிவபெருமானை அடைவதற்கான செயல்களை நான் செய்தால் மட்டுமே வெற்றி என்னுடையதாகும் எனக் கூறி புனித நதியில் இருந்து நீரை பானையில் எடுத்தார்.
பிரபஞ்ச சக்தி என்றால் என்ன?
பிரபஞ்சம் என்பது கோள்கள் பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் விண்கற்களையும் கொண்ட ஆகாயமாகும். இவ்விதம் பலவிதமான நட்சத்திரங்களை தாங்கி நிற்கும் வல்லமை உடையதே பிரபஞ்ச சக்தி ஆகும்.
இந்த பிரபஞ்ச சக்தி என்பது அபரி விதமானது மற்றும் மகத்துவம் கொண்டதாகும். இந்த பிரபஞ்ச சக்தியை பெற்று பயன்படுவோர் என்பது மிகவும் குறைந்த நபர்களே.
ஆயினும் பானையில் எவ்விதமான சேதமும் இல்லாத பட்சத்தில் நதியில் இருந்து எடுத்த நீர் பானையில் நிரம்பாமல், அனைத்தும் மறைந்து போயின. இதில் என்ன அனர்த்தம்? பானையில் நீர் எடுக்க எடுக்க நீர் குறைவதை கண்ட தேவி என்னவென்று புரியாமல் நின்றார். ஆனால் நந்தி தேவரோ, இது எம்பெருமானின் திருவிளையாடல் என்பதை உணர்ந்தார்.
ஆனால், தேவி சிறிது நேர சிந்தனைக்கு பின் எம்பெருமானின் நாமமான ஓம் நமச்சிவாயா என கூறி பின்பு பானையை நதியில் மூழ்கி நீரை எடுத்தார். பின்பு நதி நீரானது பானையில் இருந்து மறையாமல் அவ்விடத்திலேயே இருந்தது.
நதி நீரானது பானையில் இருந்து மறையாமல் அவ்விடத்திலேயே இருந்ததைக் கண்ட பார்வதி தேவி மிகவும் மகிழ்ச்சியுற்று காணப்பட்டார். நந்தி தேவருக்கோ முன்பு ஏன் பானையின் நீரானது இல்லாமல் போனது தேவி எனக் கேட்டார். அதற்கு தேவியோ நான் பக்தி மார்க்கத்தை விடுத்து மையல் எண்ணங்களால் நிரம்பி இருந்தேன்.
மேலும் எப்பணியை நான் செய்யேன் என்றாலும் என் கணவரிடம் அனுமதியின்றி செய்தால் அப்பணி நிறைவடையாது. ஆகவே, என் கணவரான சிவபெருமானை எண்ணி மையல் எண்ணங்களை விடுத்து பக்தியுடன் அவரை வழிபடவே பானையில் நீரானது நிரம்பியது என்றார்.
நந்தி தேவரிடம் நான் விரைவில் என் கணவருடன் கைலாய மலைக்கு வருகிறேன் என்று கூறி அந்த மகிழ்ச்சியான தருணங்களை எண்ணியவாறே தண்ணீர் பானைகளை தோளில் வைத்து பின் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பயணத்தின் போது மையத்தில் வயதான ஒருவர் அவரின் உடல்நிலை முடியாத குழந்தைக்கு தண்ணீர் வேண்டி புனித நதியை நோக்கி வந்தார்.
அவ்வேளையில் தேவி பார்வதி இருபானைகள் நிறைய தண்ணீர் கொண்டு வருவதை எண்ணி அவரிடம் தன்னுடைய குழந்தையின் தாகத்தை தணிக்க தண்ணீர் தந்து உதவுமாறு கேட்டு நின்றார்.
வயதான முதியவர் தனது மகனை காண்பித்து தேவியே இவன் தாகத்தை தணிக்கவே நான் புனித நதி ஓடும் பாதையை தேடிக் கொண்டு இருந்தேன். தாங்கள் சிறிது தண்ணீர் அளித்து இவன் தாகத்தை தணிப்பீர்களா? என்றார்.
தேவியும் சிறிதும் யோசிக்காமல் தாகத்தில் உள்ள மகனுக்கு தண்ணீர் அளித்தார். தாகம் தணிந்த அந்த வயதான முதியவரின் மகன் என் தாகத்திற்காக நீங்கள் மேற்கொண்ட விரதத்தை பொருட்படுத்தாமல் எனக்கு நீர் அளித்த தேவி அவர்களே என்றும் நீர் குறையாமல் முழுமையாக இருக்கும் எனக் கூறிய உடனே பானையில் நீர் நிரைய ஆரம்பித்தன.
முதியவரும் அவருடைய மகனும் தேவிக்கு நன்றி கூறினார்கள். பின் தேவி புனித நதியில் இருந்து எடுத்த நீரை எடுத்துக்கொண்டு தான் தங்கி இருக்கும் குடிலை நோக்கி பயணம் மேற்கொண்டார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக