பார்வதி தேவி சிறிது தூரம் சென்றதும் வயதான முதியவரும், உடல்நிலை சரியில்லாத அவருடைய மகனாக இருந்தவர்கள் சுய உருவம் பெற்ற நாரதரும், நந்தி தேவரும் பார்வதி தேவி கைலாயத்திற்கு விரைவில் வருகைத் தருவார் எனக் கூறினார்.
சிவபெருமான் பார்வதி தேவியின் குணங்கள் சதி தேவியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. நந்தி தேவரோ சிவபெருமானிடம் தங்களின் அன்பிற்காக பல இன்னல்களை அனுபவித்தும் அதை எண்ணி மகிழ்கின்றார் என கூறினார்.
தேவியின் மனதை மாற்ற வேண்டும் என எண்ணிய எம்பெருமானின் மனதில் பார்வதி தேவி இடம் பிடிக்க ஆரம்பித்ததை உணர தொடங்கினார் நந்தி தேவர். ஏனெனில், பார்வதி தேவி பற்றிய உரையாடல்கள் நிகழும் போது எம்பெருமான் சினம் கொள்வார். ஆனால், இன்று ஏதும் நிகழவில்லை என்பதை எண்ணி அகம் மகிழ்ந்தார் நந்தி தேவர்.
பிரபஞ்ச சக்தி பெறும் வழிகள் யாவை?
பிரபஞ்ச சக்தியை தியானம் மூலமே பெற இயலும். நாம் எப்பொழுது மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் மேற்கொள்ளும் போது நாம் பிரபஞ்ச சக்தியை பெற கூடிய சிறந்த அகப்பையாக மாறுகின்றோம்.
பிரபஞ்ச சக்தியை நாம் பெறுவதால் ஏற்படும் பலன்கள் யாவை?
அன்றைய காலங்களில் வாழ்ந்த முனிவர்கள் இந்த பிரபஞ்ச சக்தியை கொண்டே உடல் நலனில் ஏற்பட்ட பல இன்னல்களை நீக்கினார்கள். இந்த பிரபஞ்ச சக்தியை நாம் உள்வாங்கும் போது உடல் நலம் மேம்படும். மனதில் இருந்த எண்ண ஓட்டங்களை சீர் செய்ய இயலும். நாம் நினைத்ததை நினைத்த விதத்தில் பதற்றமின்றி தெளிவுடன் செய்ய இயலும்.
சிவலிங்கம் செய்வதற்காக புனித நதியில் இருந்து நீர் எடுத்து, பின்பு தான் தாங்கியிருக்கும் குடிலுக்கு தேவி வந்தார். குடிலில் எடுத்து வந்த நீரை பாதுகாப்பாக வைத்துவிட்டு பின் லிங்கம் செய்வதற்கான பணியை தொடங்கிய தருணத்தில் நாரத முனிவர் வருகை தந்தார்.
பார்வதி தேவி, நாரதரை வணங்கி உபசரித்து விட்டு தன் பணியை தொடரும் முன்பு தன்னுடைய பெற்றோர்களை மனதார எண்ணினார். பின்பு மனதில் சிவ சிந்தனைகளுடன் எடுத்து வந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை செய்ய தொடங்கினார்.
இருப்பினும் லிங்கம் பூர்த்தியாகும் தருணத்தில் அனைத்தும் காற்றில் கரைந்து போயின. என்ன அனர்த்தம் இன்னும் நிகழப்போகிறதோ? என்று தேவி எண்ணும் தருணத்தில் நாரத முனிவர் தேவியை சமாதானம் செய்து மீண்டும் முயற்சி செய்து சிவலிங்கத்தை பூர்த்தி செய்யுமாறு கூறினார். ஆனால், பல முறை முயன்றும் சிலைகள் யாவும் முழுமையடையாமல் காற்றில் கரைந்த வண்ணமாக இருந்தன.
கைலாயத்தில் லட்சுமி தேவியுடன் இருந்த நாராயணன் இங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் யாவையும் பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால், லட்சுமி தேவியோ தன் கணவரான நாராயணனை கண்டு பார்வதி தேவி அடையும் இன்னல்கள் நியாயமற்றது எனக் கூறினார்.
வலிமை கொண்டவர், எளியவர்களை இவ்விதம் இன்னல்களுக்கு ஆளாக்குவது என்பது முறையன்று என தன் பதியிடம் கூறினார்.
பிரபஞ்ச சக்திக்கும் நம் உடலில் உள்ள சக்கரத்திற்கும் உள்ள தொடர்பு யாது ?
நம் உடலில் உள்ள இந்த சக்கரங்களே பிரபஞ்ச சக்தியை நம் உடலின் நிலைக்கு ஏற்றவாறு அதாவது நமது உடல் உறுப்புகளின் தேவைகளுக்கு தேவைப்படும் சக்திகளாக மாற்றி தருகின்றன.
நமது உடலில் இருக்கும் சக்தியை பரிமாற்றி தரும் சக்கரங்களின் வடிவம் யாது?
சக்கரம் என்றாலே அது வட்ட வடிவம் ஆகும். எனவே நமது உடலில் உள்ள சக்கரங்கள் யாவும் வட்ட வடிவங்கள் ஆகும்.
நாராயணன் அங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் செயல்களின் நோக்கங்களை நன்கு உணர்ந்தவர். இருப்பினும் தன் பக்தர்கள் இன்னல்களுடன் இருப்பதை காண நாராயணன் தன் மனைவியுடன் மாற்று உருவத்தில் வந்தார். அதாவது, சிலைகள் செய்யும் சிற்பிகளாகவும் அவருக்கு உதவியாக லட்சுமி தேவியும் அங்கு வந்தனர்.
பின்பு சிற்பியாக வந்த நாராயணன், லட்சுமி தேவி அவர்கள் பார்வதி தேவி இருக்கும் குடிலை அடைந்தனர். அவ்வேளையில் சிலையை முழுமையாகாமல் இருந்ததையும் மனதிற் கொள்ளாமல் வந்தோரை வரவேற்று உபசரித்தார். பின்பு, தன் பணியை மீண்டும் தொடர அவர்களிடம் அனுமதி கேட்டார்.
பின் சிற்பியாக வந்தவர் பார்வதி தேவியிடம், என்னுடைய தாகத்தையும், பசியையும் போக்கிய உங்களுக்கு நான் ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என்று கூறி நின்றார். வந்திருப்பவர் யார் என்று நாரதர் நன்கு உணர்ந்தார். இருப்பினும் அதை தேவியின் முன் கூறாமல் மௌனம் காத்தார்.
பின்பு நாரதரோ தேவியின் விருப்பத்தை எல்லாம் அறிந்த நாராயணனுக்கு எடுத்துக் கூறினார். பின்பு மாற்று உருவத்தில் வந்த நாராயணன் தேவி நான் ஒரு சிற்பியாவேன். என்னால் அனைத்து வகையான சிற்பங்களையும் செய்ய இயலும் என்று கூறினார்.
இருப்பினும் தேவி நான் ஏற்ற பணியை நானே செய்தல் என்பதே உசிதமாகும் என்று கூறி அவரின் உதவி வேண்டாம் என்று அவருடைய மனம் புண்படாத வகையில் கூறினார். ஆனால் அங்கு நாரதர் இருப்பதை மறந்தார். பின் நாரதர் தன் பணியை தொடர்ந்தார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக