>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 ஜனவரி, 2020

    சிவபுராணம்..! பகுதி 41

      ந்தணராக வந்த சிவபெருமான் உணவு உண்ட பிறகு பார்வதி தேவிக்கு நன்றி கூறி தன் பயணத்தைத் தொடர தொடங்கினார். ஆனால், பார்வதி தேவி தங்களின் பயணத்தில் தான் குறுக்கிடுவதற்கு என்னை மன்னியுங்கள். தாங்களோ பிரயாண களைப்பால் மிகவும் சோர்வாக உள்ளீர்கள்.

    தாங்கள் எங்களுடன் இந்த குடிலில் தங்கி, தங்களின் களைப்பு நீங்கிய பின் தங்களின் பயணத்தை தொடரலாமே என்று கூறினார். அந்தணரும் இத்தருணத்திற்காக காத்திருந்தது போல் சிறிது சிந்தித்து பின்பு அங்கு தங்குவதற்கு சம்மதித்தார்.

    அவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை தேவி பார்வதி தனது தோழிகள் மூலம் முன்னரே ஏற்பாடு செய்திருந்தார். முக்காலமும் உணர்ந்த முதிய அந்தணர் உருவத்தில் இருக்கும் எம்பெருமானான சிவபெருமானை தேவி பார்வதி முன்பே தயார் நிலையில் இருக்கும் வசதிகள் மிக்க படுக்கையை காட்டி தாங்கள் ஓய்வெடுக்க கூறினார்.

    ஆனால், அந்தணரோ வசதிகள் கொண்ட, அதாவது காட்டில் உள்ள வலிமையான மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட கட்டிலில் இதமான விரிப்பான் மற்றும் தலையணைகளை விடுத்து தேவி எப்போதும் நித்திரை கொள்ளும் தரை தளத்தில் சிறிய விரிப்பானை விரித்து அதன்மீது துயில் கொண்டார் அந்தணரான எம்பெருமான்.

    தேவி எவ்வளவு கூறியும் அவர் தரை தளத்தில் துயில் கொண்டார். அவருடைய பயணக்களைப்பால் கால்களில் மிகுந்த வலி ஏற்பட்டு இருக்கும் என எண்ணிய பார்வதி தேவி அவரின் கால்களை வருடியபடி அவருக்கு அருகில் இருந்தார்.

    பயணக்களைப்பால் ஏற்பட்டு இருக்கும் சோர்வும் சிறிது கால நித்திரையும் நீங்கி எழுந்த அந்தணரை கண்ட பார்வதி தேவி அவருக்கு அருந்துவதற்காக தண்ணீர் கொடுத்து அவரை பற்றி விசாரிக்க தொடங்கினார்.

    அந்தணரே தாங்கள் யாரென்று கூறவில்லையே? இந்த முடியாத வயதிலும் தாங்கள் இம்மலையை கடக்க காரணம் என்ன? தங்களை சார்ந்தவர்கள் யாரேனும் உண்டா? என வினவினார் பார்வதி தேவி.

    அந்தணர் உருவத்தில் இருந்த எம்பெருமான் தனக்கென்று யாருமில்லை. நான் ஒரு ஏழை அந்தணர் ஆவேன். வயது முதிர்ச்சி அடைந்தாலும் இந்த பசியானது விட்டப்பாடு இல்லை. என்னை யார் அமர வைத்து வேண்டிய உணவுகளை அளித்து பார்த்து கொள்வார்கள்?

    அதனால்தான் நான் ஊர் ஊராக சென்று கொண்டு இருக்கிறேன் என்றார். இவ்வூரின் வழியாக வரும் போது தங்களின் தோழி மூலமாக இக்குடிலை அடைந்தோம். இனி மேற்கொண்டு தாங்கள் உணர்ந்ததே என்று தனது வாழ்க்கை பற்றிய விவரங்களை முதியவர் தேவியிடம் கூறினார்.

    முதியவர் வடிவத்தில் இருந்த எம்பெருமான் அந்தணருக்கான காரணங்களை உரைத்த பின்பு தன் உண்மை உருவத்தை காட்டாமல் தேவியிடம் தான் வந்த காரணத்திற்கான கேள்விகளை கேட்க தொடங்கினார்.

    அதாவது, தேவி என்னை பற்றிய தகவல்களை நீ அறிந்தாய் அல்லவா உன்னைப் பற்றி கூறும் என்று அந்தணர் கூறினார். மேலும், இந்த வயதில் நீ மேற்கொண்டு வரும் தவத்திற்கும், உனது அகவைக்கும் பொருத்தமன்று.

    நீர் இறைவனுக்கு செய்யும் பூஜையாலும், எளியவருக்கு வேண்டும் உதவுகளை செய்வதாலும் உன் மீது கொண்ட அக்கறையாலும் நான் கேட்கின்றேன் என்றார்.

    உடலை வருத்திக்கொண்டு கடுமையான தவம் மேற்கொள்ளும் வயது உனக்கில்லை. உன் வயது பெண்கள் அழகான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் யாவும் அணிந்து மகிழ்ச்சியுடன் அழகான தோற்றத்துடன் இருக்கின்றனர்.

    ஆனால், நீரோ எவ்விதமான அலங்காரமும் இன்றி எளிமையான உடைகள் அணிந்து கொண்டு இருக்கிறாய். இது உன்னுடைய அழகிற்கு ஏற்ற அலங்காரம் அல்ல என்றார்.

    சிவபுராணம் நாளையும் தொடரும்....

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக