சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A51
ஸ்மார்ட்போன் ஆனது நாளை (ஜனவரி 29, புதன்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகிறது. தென்
கொரிய நிறுவனமான சாம்சங் கடந்த திங்களன்று வெளியிட்ட ஒரு சோஷியல் மீடியா போஸ்ட்
வழியாக இதை உறுதி செய்துள்ளது நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும்
கேலக்ஸி ஏ71 ஆகிய இரண்டும் கடந்த மாதம் வியட்நாமில் அறிமுகம் ஆகின. இந்த இரண்டு
புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் போன்களும் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன் வருகின்றன (சாம்சங்
இதை ஹோல்-பஞ்ச் டிப்ஸ்ளே வடிவமைப்பு என்கிறது) மற்றும் இரண்டுமே க்வாட் ரியர்
கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ
அறிமுகத்தை அறிவிக்க, சாம்சங் மைக்ரோ சைட் ஒன்றை ஒன்றை வெளியிட்டது.
ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே? அல்லது இரண்டுமே அறிமுகம் ஆகுமா?
கூறப்படும் மைக்ரோ சைட் லிங்கில்
கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்த பரிந்துரைக்கும்
““galaxy-a517” என்று குறிப்பிடும் URL நீடிப்பையும் நம்மால் காண முடிகிறது. ஆக
Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய இரண்டுமே ஜனவரி 29 ஆம் தேதி
அறிமுகப்படுத்தப்படலாம். சமீபத்திய லீக்ஸ் தகவலின்படி, ஆரம்பத்தில் கேலக்ஸி ஏ 51
சந்தைக்கு வரும், மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ 71 ஆனது அடுத்த மாதத்தில் எப்போதாவது
விற்பனைக்கு வரும்.
சாம்சங் கேலக்ஸி ஏ51 இன்
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்:
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 51
ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.22.990 க்கு அறிமுகம் ஆகலாம். இருப்பினும், இந்த
போனின் அதிகாரப்பூர்வ இந்தியா விலையை சாம்சங் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
வியட்நாமில், சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய மதிப்பின்படி
தோராயமாக ரூ.24,600 க்கு (6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்) விற்பனை
ஆகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ஒயிட், ப்ளூ மற்றும் பிங்க் ஆகிய
வண்ண விருப்பங்களில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின்
பிரதான அம்சங்கள்:
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட
சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 உடன்
இயங்குகிறது மற்றும் 6.5 இன்ச் அளவிலான முழு எச்டி+ (1080x2400 பிக்சல்கள்) சூப்பர்
அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் SoC மூலம்
இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் க்வாட் ரியர்
கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் (எஃப் / 2.0) + 12 மெகாபிக்சல் (எஃப் / 2.0)
அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 5 மெகாபிக்சல் (எஃப் / 2.4) மேக்ரோ லென்ஸ் + 5
மெகாபிக்சல் (எஃப் / 2.2 ) டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தை
பொறுத்தவரை 32 மெகாபிக்சல் (எஃப் / 2.2) செல்பீ கேமரா உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின்
மற்ற அம்சங்கள்:
மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி
வரை மெமரி நீட்டிப்பு ஆதரவை வழங்கும் இந்த கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி
அளவிலான இன்டர்னல் மெமரியும் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி
எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
ஆகியவைகள் உள்ளன. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஒரு
4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை
ஆதரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக