
சர்வதேச
டேட்டா ப்ரைவஸி தினம் (International Data Privacy Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28
அன்று அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும்
தனியுரிமையை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நாளின் பிரதான
நோக்கமாகும். இந்நாள் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி அன்று கன்வென்ஷன் 108
கையெழுத்திட்டதை நினைவுகூரும் நாள் ஆகும். தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
தொடர்பான முதல் சர்வதேச உடன்படிக்கை கன்வென்ஷன் 108 ஆகும். இந்நாளில் உங்களை
ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் 5 முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பற்றி
பார்ப்போம்!
01.
நீங்கள் எதை டவுன்லோட் செய்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை, கண்டபடி டவ்ன்லோட்
செய்யக்கூடாது!

ஹேக்கர்கள் உங்கள் அக்கவுண்ட்டை ஹேக்
செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று, அதில் மால்வேர்களை பதிவிறக்கம் செய்ய வைப்பது
தான். மால்வேர் என்னு வந்துவிட்டால் அதில் ப்ரோகிராம்களும் அடங்கும் ஆப்களும்
அடங்கும். மால்வேர்களால் உங்களின் தனிப்பட்ட தரவுகளை மிகவும் எளிமையாக திருட
முடியும். ஆகவே சந்தேகத்திற்கிடமான அல்லது நம்பகத்தன்மையற்றதாக தோன்றும் எந்தவொரு
ஆப்பையும் அல்லது மென்பொருளையும் பதிவிறக்க வேண்டாம்.
02.
வலுவான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துங்கள், கவனக்குறைவாக இருக்க வேண்டாம்!

இணைய பாதுகாப்பு கட்டமைப்பின்
முக்கியமான மாற்று பெரிய பலவீனம் - கடவுச்சொற்கள், அதாவது பாஸ்வேர்ட் ஆகும்.
ஏனெனில் பெரும்பாலான மக்கள் மற்றவர்களால் எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச்சொற்களைத்
தேர்ந்தெடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
எனவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
உங்களின் கடவுச்சொற்கள் வலுவாக இருப்பதை நீங்கள் உறுதிசெய்து கொள்ளுங்கள். அதாவது
உங்கள் பாஸ்வேர்ட்டில் ஸ்பெஷல் லெட்டர்ஸ், கேப்பிடல் மற்றும் ஸ்மால் லெட்டர்களின்
சேர்க்கை போன்றவற்றை உள்ளடக்குங்கள்.
பலமான கடவுச்சொல்லைத் தேர்வுசெய்ய உதவும் பல
மூன்றாம் தரப்பு ஆப்களும் உள்ளன, அவைகளின் உதவியையும் நீங்கள் நாடலாம். எல்லா
பலமான மற்றும் கடினமான பாஸ்வேர்ட்களை மட்டுமே உங்களை காப்பாற்றாது, எல்லா
அக்கவுண்ட்களுக்கும் அல்லது போர்ட்டலுக்கும் ஒரே கடவுச்சொற்களை வைத்திருப்பது
போன்ற சில மோசமான பழக்கங்களையும் நீங்கள் மாற்ற வேண்டும்.
03.
http இருக்காதா? அலல்து https இருக்கிறதா? சோதிக்க மறவாதீர்கள்!

உங்கள்
கிரேட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் அல்லது மொபைல் வேலட் விவரங்களை கேட்கும்
ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆனது மிகவும் நம்பகமான சேனலாக இருக்கிறதா என்பதை நீங்கள்
உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சில தளங்கள் மறைகுறியாக்கப்பட்ட இணைப்புகளை
கொண்டிருக்கும், அது உங்களின் தனிப்பட்ட டேட்டாவை சேகரிக்கும். அட்ரஸ் பாரின்
தொடக்கத்தில் காணப்படும் http உடன் 's' என்கிற எழுத்து இருக்கிறதா என்று
சோதித்துப் பார்ப்பதன் மூலம் ஒரு தளம் பாதுகாப்பானதா இல்லையா என்பதை ஒரு பயனர்
அடையாளம் காண முடியும் என்று போஸ்டன் பல்கலைக்கழக அறிக்கை தெரிவித்துள்ளது.
http
என்று தொடங்கினால் அது பாதுகாப்பற்றது, ஏனெனில் பாதுகாப்பான ஒன்று https ஆக
இருக்கும்.
04. உங்களின் ஆன்டி வைரஸ் ப்ரோகிராம் எப்போதும் அப்டேட்
செய்யப்படுவதை உறுதிசெய்யவும்!

இது அடிப்படையிலேயே மென்பொருளுக்கு
ஒரு பாதுகாப்பு அடுக்கை வழங்குகிறது. இது எல்லா மால்வேர்களையும் அகற்றும் என்று
கூற முடியாது, ஆனால் நிச்சயமாக அதைக் கண்டறிந்து அதில் பெரும்பாலானவைகளை நீக்கும்.
குறிப்பாக நீங்கள் இயக்க முறைமை (ஓஎஸ்) மற்றும் ஆப் அப்டேட் செய்த பின்னர் அது
ஆன்டி வைரஸ் பாதுகாப்பு அடுக்கில் சேர்க்கப்படுவதை நீங்கள் உறுதிப்படுத்த
வேண்டும்.
05.
ஃபயர்வால்-ஐ பயன்படுத்தவும்.

ஃபயர்வால் (Firewall) அடிப்படையில்
உங்கள் சாதனங்களுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கும் ஒரு எலெக்ட்ரானிக் பேரியர்
(மின்னணு தடை) ஆகும். சில நேரங்களில், ஃபயர்வால் விரிவான செக்யூரிட்டி சாப்ட்வேர் உடன்
வருகிறது. இது உங்கள் பிணையத்துடன் இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களும் பாதுகாப்பாக இருப்பதை
உறுதி செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக