>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 3 ஜனவரி, 2020

    லேப்டாப் பயனர்களுக்கு எச்சரிக்கை! இந்த 4 அறிகுறிகளை கண்டால் உடனே உஷாராகி கொள்ளவும்!

    "நேத்து நல்லாதானே வேலை செஞ்சது.. இன்னைக்கு இதுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி மக்கர் பண்ணுது!" என்று கூறி உங்கள் லேப்டாப்பை ரீஸ்டார்ட் செய்து விட்டீர்களா? அப்போதும் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லையா? இந்த இடத்தில் தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் லேப்டாப்பை வைரஸ் அட்டாக் செய்து இருக்கலாம்!

    நம்மில் சிலர் "இந்த சிக்கலை" சந்தித்தும் இருக்கலாம்!

    கம்ப்யூட்டர் வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் (தீம்பொருள்) ஒன்றும் பிசிக்களுக்கான புதிய ஆபத்துகள் அல்ல. அடிக்கடி இல்லையென்றாலும் கூட, அவ்வப்போது பயனர்களின் டேட்டா மற்றும் தகவல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீம்பொருள் அல்லது வைரஸ்கள் பிசிக்களில் பரவும் சம்பவங்களை பற்றி நாம் கேட்க நேரிடுகிறது, நம்மில் சிலர் இதை சந்தித்தும் இருக்கலாம்.

    சில "கண்காணிப்புகளை" வைத்து உறுதிப்படுத்தி விடலாம்!

    ஆனால் ஒரு பிசி ஆனது வைரஸ் அல்லது மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? பிசி / லேப்டாப்பில் வைரஸ் அட்டாக் நிகழ்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் எதேனும் உள்ளதா? ஆம், உள்ளது! உங்கள் லேப்டாப் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சில "கண்காணிப்புகளை" வைத்து உறுதிப்படுத்தி விடலாம்.


    அறிகுறி 01:


    முதலில் உங்கள் லேப்டாப் வழக்கமான செயல்திறனை விட மெதுவாக இயங்குகிறதா என்று சோதிக்கவும். ஏனெனில் ஒரு மால்வேரால் உங்கள் லேப்டாப்பின் ப்ராசஸிங் ரிசோர்ஸ்களை பாதிக்க முடியும், ஆக உங்களின் லேப்டாப் வழக்கத்தை விட மிகவும் ஸ்லோவாக இருந்தால், நீங்கள் உஷார் ஆகிக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நீங்கள் ரிசோர்ஸ்-ஹெவி அப்ளிகேஷன் எதையும் இயக்கவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். ஒருவேளை சாதாரண சிஸ்டம் ஆப்ஸ் அல்லது ப்ரோகிராமிங்கிற்கே அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அது வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

    அறிகுறி 02:


    நிலையற்ற சிஸ்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அறிகுறி, நீங்கள் ஒரு ப்ரோகிராமை இயக்க முயற்சிக்கும்போது அல்லது ஃபைல் கரப்டட் எரர் காட்சிப்படும் போது BOD (Blue screen of death) தோன்றும். இந்த ப்ளூ ஸ்க்ரீன் ஆப் டெத் என்பது லேப்டாப்பில் தீங்கிழைக்கும் மால்வேர் இருப்பதற்கான குறிப்பிடத்தக்க அறிகுறியாகும்.



    அறிகுறி 03 & அறிகுறி 04:

    ஒவ்வொரு போல்டரிலும் சில சீரற்ற ஷார்ட்கட்கள் உருவாக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், உங்கள் லேப்டாப் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.
    டிரைவ் லாக் செய்யப்பட்டுள்ளது அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது இணைக்கப்பட்ட பிரிண்டர் இயக்கப்பட்டிருந்தாலும் இணைக்கப்பட்டிருந்தாலும் பதிலளிக்கவில்லை என்று கூறும் சீரற்ற மெசேஜ்களை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் உஷாராகி கொள்ளுங்கள்.இதில் சில வைரஸ் சம்பந்தப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

    பல அறிகுறிகள் ஆனால் ஒரே வழி!

    இப்படியாக உங்கள் லேப்டாப் பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அடையாளம் காண சில அடிப்படை அறிகுறிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால் இதிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது அப்டேடட் டேட்டாபேஸ் உடனான ஆன்டி-வைரஸ் ஒன்றை பதிவிறக்கம் செய்வது மட்டுமே, இது குறிப்பிட்ட வைரஸ்களை அடையாளம் காணவும் லேப்டாப்பில் இருந்து அகற்றவும் உங்களுக்கு உதவும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக