ஒரு இடத்தில் நடக்கும் செயல்கள் செய்தி
தளங்களில் வெளிவருவதற்கு முன்னாள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக தொடங்கி
விடுகிறது. உதாரணமாக தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை எடுத்துக்
கொண்டால், போராட்டத்தின் போது நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி அது உலக நாடுகளையே
கலக்கியது.
இன்டெர்நெட்
முடக்கம்
டெல்லியில் நடந்த சில போராட்டங்களையும்
உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த காலக்கட்டத்தில் சமூகவலைதளம் என்பதும்
இன்டெர்நெட் என்பதும் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. சில போராட்ட நேரங்களில் தவறான
தகவல்கள் மர்மநபர்களால் பரப்பப்பட்ட வருவதன் காரணமாக அந்த சமயத்தில் அரசு இணையத்தை
துண்டிப்பது உண்டு.
இன்டெர்நெட்
இல்லாமல் டுவிட்
அந்த சமயத்தில் இன்டெர்நேட் தேவை
இல்லாமலேயே நமது நிகழ்வை டுவிட்டரில் கருத்து தெரிவிக்கலாம். அது எப்படி
இன்டெர்நெட் இல்லாமல் டுவிட் செய்வது என்ற சந்தேகம் இருக்கலாம். டுவிட்டரில்
இன்டெர்நெட் இல்லாமல் டுவிட் செய்யும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
மொபைல்
நம்பரை இணைக்க வேண்டும்
இன்டெர்நெட் இல்லாமல் டுவிட் செய்வதன்
முதல் கட்டம் என்னவென்றால் அது, தங்களது மொபைல் நம்பரை டுவிட்டர் அக்கவுண்டுடன்
இணைத்து வைத்து கொள்ள வேண்டும். மொபைல் எண் இணைக்கப்பட வில்லை என்றால் இந்த
நடைமுறை செயல்படாது.
இணைய
நிறுத்தத்தின் போது டுவிட் செய்யலாம்
அதுபோன்ற இணைய நிறுத்தத்தின் போது
டுவிட் செய்வதற்கு டுவிட்டர் ஷார்ட் கோட் உதவும். அது என்ன டுவிட்டர் ஷார்ட் கோட்,
அதை எப்படி பயன்படுத்துவது என்ற கேள்விக்கு பதில் காணலாம். டுவிட்டர் ஷார்ட் கோட்
என்பது எஸ்எம்எஸ் மூலம் டுவிட் செய்வது. இது டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு
செயல்பாடாகும்.
9248948837
என்கிற எண்ணுக்கு மெசேஜ்
9248948837 என்கிற எண்ணுக்கு மெசேஜ்
செய்தால், அது தானாக நமது டுவிட்டர் அக்கவுண்டில் டுவிட்டாகி விடும். டுவிட்டரின்
ஆதரவு பக்கமான டுவிட்டர் ஷார்ட் கோட் இந்த செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.
குறுஞ்செய்தியை
இந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்
அதாவது நீங்கள் டுவிட் பதிவு செய்ய
விரும்பினால், அந்த குறுஞ்செய்தியை டைப் செய்து 9248948837 என்ற எண்ணுக்கு அனுப்ப
வேண்டும். இந்த எஸ்எம்எஸ்-ஐ நீங்கள் டுவிட்டரோடு லிங்க் செய்துள்ள நம்பரில்
இருந்து அனுப்ப வேண்டும் என்பது அவசியம்.
இன்டெர்நெட்
முடக்கத்தின் போது செயல்படும்
அப்படி மெசேஜ் செய்யும் பட்சத்தில்,
தங்களது டுவிட்டர் பக்கத்தில் மெசேஜ் செய்த தகவல்கள் டுவிட்டாக பதிவாகி விடும்.
இந்த செயல்முறையானது இன்டெர்நெட் முடக்கத்தின் போது மட்டுமே செயல்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக