பார்வதி தேவியின் கூற்றுகளை கேட்ட மேனை தேவி உன்னைகடுமையான தவம் செய்து உன் விருப்பம் புகழையும் பேசிய மற்றவர்கள் உடல் விகார தோற்றம் கொண்டதை சொல்ல மறந்தார்களோ? இங்குள்ள யாவரும் அதை உணரவில்லையா?
மேனையின் கூற்றுகளை கேட்ட அனைவரும் உலகை சிருஷ்டித்த எம்பெருமான் இம்மண விழாவில் மிகுந்த எழிலுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின் உருவத் தோற்றத்தில் எவ்விதமான குறைபாடும் இல்லையே என மேனையின் பதியான இமவான் மன்னனும், பார்வதியும் கூறினார்கள்.
இருப்பினும் அவர்களின் கூற்றுகளை ஏற்றுக்கொள்ளாத மேனைதேவி இத்திருமணம் நடைபெறக் கூடாது என வலுவாக கூறினார். மேனை தேவியின் கூற்றுகளிலிருந்து அவரின் மனதில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தை உணர்ந்த நாரதர் இவ்விதமான சங்கடத்திற்கு காரணமான சிவபெருமானே தீர்வு அளிக்கக்கூடியவர்.
மணமகன் அலங்காரத்திலிருந்த சிவபெருமானை காண நாரதர் விரைந்தார். தேவர்களின் மத்தியில் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை கண்ட நாரதர் திருமணத்தில் ஏற்பட்டுள்ள தடையையும், மேனைதேவியின் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றியும் எல்லாம் உணர்ந்தவரான சிவபெருமானிடம் கூறினார்.
நாரதர் சிவபெருமானிடம் இதென்ன திருவிளையாடல் எம்பெருமானே? அனைவருக்கும் அழகாக காட்சியளிக்கும் தாங்கள் ஏன் பார்வதியின் தாயான மேனை தேவிக்கு மட்டும் விகாரமாக காட்சி அளிக்கின்றீர்கள். உங்களின் விகாரத் தோற்றத்தை கண்டது முதல் மேனை தேவியின் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது.
மேலும், தன்னுடைய மகளின் திருமணத்தில் முழு மனதோடு இல்லாமல் இருப்பதாக கூறி அவர்களுடைய மனம் மகிழ்ச்சி கொள்ளும் தோற்றம் கொண்டு காட்சியளிப்பீர்களாக என்று வேண்டினார்.
மேனை தேவியின் மனக் குமுறல்களையும் அவர்களுக்கு கிடைத்துள்ள சிறப்பையும் உணராமல் இன்னும் சிவபெருமானின் தோற்றம் பற்றிய எண்ணங்கள் மற்றவர்கள் தங்களின் குலத்தை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமே மிகுந்து இருந்தது. என் மகளை அந்த ஆண்டியான சிவன் மணப்பதா? என புலம்பிக் கொண்டு இருந்தார் மேனை தேவி.
மேனை தேவி என் மகளை அந்த ஆண்டியான சிவன் மணப்பதா? என புலம்பிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த பிரம்மாவும், திருமாலும் என்னவாயிற்று மகளே என மேனை தேவியிடம் கேட்டனர். இவர்களின் வருகையை அறிந்த அனைவரும் அவர்களை வணங்கி மேனை தேவி மனதில் கொண்டுள்ள தம் மகளின் எதிர்காலம் பற்றிய கவலைகளை எடுத்துக்கூறினர்.
அவர்களின் கூற்றுகளை கேட்டதும் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை அறிந்தவராகவும், தனக்கும் இதில் பங்கு இருப்பதை எண்ணி மகிழ்ந்தார் திருமால். எழில் மிகுந்த புன்முறுவலுடன் பிரம்ம வம்சத்தில் பிறந்து இமவானின் இல்லாள்ளான நீ எவ்வளவு பெரிய பாக்கியசாலி. உன் பாக்கியத்தை பற்றி நான் என்னவென்று உரைப்பேன்?
இங்குள்ள தேவர்கள், முனிவர்கள், பிரம்மா என நாங்கள் கூறும் செயலில் சுபத்தன்மை இல்லாமல் துன்பம் நிறைந்த செயலை தாங்களே செய்ய சொல்வோமா? நாங்கள் சொல்லிய சொல்லில் உண்மையின்றி பொய்யுள்ளது என நீ நினைப்பது சரியானதா தேவி? நீ
எம்பெருமான் அவரால்தான் இந்த சகல உலகங்களும் உருவாக்கப்பட்டன. அதனை வழி நடத்தவும் காக்கவும் மூம்மூர்த்திகளில் பிரம்மதேவரும் நானும் படைக்கப்பட்டவர்கள். எங்களுடைய தோற்றத்திற்கு பின்பு வேதங்கள், தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த பூவுலகில் ஜீவிக்கும் தன்மைக் கொண்ட தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டன.
எல்லோருக்கும் முழு முதற்கடவுளான சர்வங்களை படைத்த முக்கண் கொண்ட சிவபெருமானின் புகழை சொல்வது என்றால் எத்தனை யுகங்கள் ஆனாலும் சொல்லி முடிவதற்கில்லை. ஒரு சிறிய விதையில் இருந்து விருட்சம் தோன்றி உண்டாகும் கிளைகள், இலைகள் மற்றும் மலர்கள் போன்றவர்கள் தான் தேவர்கள் மானிடர்கள் யாவருமே. ஏன் இங்கு அனைத்தும் நிரம்பிய இந்த பிரபஞ்சமே.
இந்த பிரபஞ்சம் எவ்வளவு வளமை உடையதாக இருப்பினும் அதன் ஆதியான சிவபெருமானை மறப்பது என்பது சரியானதா? இந்த பிரபஞ்சத்தின் ஆதியும், அந்தமும் முடிவில்லாத சிவபெருமானே இருப்பார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக