பந்தன யோகம் :
லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும் ஒன்றாக இணைந்து ஒன்று, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளில் சனியோடு இணைவது பந்தன யோகம் ஆகும்.
பந்தன யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சிறைவாசம் அனுபவிப்பார்.
பிறர் ஆணைக்கு பணிந்து வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.
மாதுரு நாச யோகம் :
சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுக்கு மத்தியில் இருந்தாலும், பாவகிரகங்களுடன் கூடி இருந்தாலும் மாதுரு நாச யோகம் உண்டாகிறது.
மாதுரு நாச யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
தாயாருக்கு ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாகும்.
நள யோகம் :
ராகு கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும்.
நள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நிலையான இடத்தில் வாழமாட்டார்.
முசல யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் அமைந்தால் முசல யோகம் உண்டாகும்.
முசல யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பல துறைகளில் ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
புகழ் பெறுவார்கள்.
வல்லகி யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஏழு ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம் ஆகும்.
வல்லகி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சங்கீத துறைகளில் மேன்மை அடைவார்கள்.
சுக போக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
ரஜ்ஜு யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே இருப்பது ரஜ்ஜு யோகம் ஆகும்.
ரஜ்ஜு யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள்.
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
பாச யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஐந்து ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும்.
பாச யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உண்மையை பேசக் கூடியவர்கள்.
தொழிலில் நேர்மையான எண்ணம் உடையவர்கள்.
சொத்துக்கள் வாங்குவதில் அதிக விருப்பம் கொண்டவர்.
தாமினி யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஆறு ராசியில் அமைவது தாமினி யோகம் ஆகும்.
தாமினி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
கல்வி ஞானம் உடையவர்கள்.
நற்பண்புகளை பெற்றவர்களாக இருப்பார்கள்.
கருணை உள்ளம் கொண்டவர்கள்.
கேதார யோகம் :
ராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது நான்கு ராசியில் இருப்பது கேதார யோகம் ஆகும்.
கேதார யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
விவசாயம், கால்நடைகள் மூலம் லாபம் அடைவார்கள்.
மனைகள் மூலம் பொருள் ஈட்டுவார்கள்.
சூல யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது மூன்று ராசியில் இருப்பது சூல யோகம் ஆகும்.
சூல யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
விபத்துகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
சண்டை சச்சரவுகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர்கள்.
யுக யோகம் :
ராகு - கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது இரண்டு ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும்.
யுக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
கயவர் நட்பை கொண்டவர்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள்.
சதுரஸ்ர யோகம் :
எல்ல கிரகங்களும் லக்னத்திலும், நான்கு, ஏழு மற்றும் பத்தாம் இடங்களிலும் அமைவது சதுரஸ்ர யோகம் ஆகும்.
சதுரஸ்ர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பெரும் புகழுடன் வாழக்கூடியவர்.
நிர்வாகத்திறமை உடையவர்கள்.
தேனு யோகம் :
ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி சுபர் சேர்க்கை அல்லது சுபர் பார்வை பெற்று பலமோடு இருந்தால் தேனு யோகம் ஆகும்.
தேனு யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உயர்ந்த கல்வி கற்பவர்களாக இருப்பார்கள்.
வாக்கு வன்மை உடையவர்கள்.
புஷ்கல யோகம் :
லக்னாதிபதி பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து மதிக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் உண்டாவது புஷ்கல யோகம் ஆகும்.
புஷ்கல யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
எளிதில் பழகக்கூடியவர்கள்.
நிலையான புகழ் கொண்டவர்கள்.
எல்லோராலும் மதிக்கப்படுவார்கள்.
முக்தி யோகம் :
லக்னத்தில் பனிரெண்டில் கேது அமையப் பெற்றவர்களுக்கு உண்டாவது முக்தி யோகம் ஆகும்.
முக்தி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பிறவா நிலை என்னும் உன்னத நிலையை அடையக்கூடியவர்கள்.
இறைநம்பிக்கை உடையவர்கள்.
இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக