ஈரோட்டிலிருந்து ஏறத்தாழ 77கி.மீ தொலைவிலும், கொடிவேரிலிருந்து ஏறத்தாழ 25கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தலம் பவானிசாகர் அணையின் முன்பகுதியில் இருக்கும் அணைப்பூங்காவாகும்.
சிறப்புகள் :
பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. பவானிசாகர் அணைப்பூங்காவை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறைந்த செலவில் சென்றுவருவதற்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் பவானிசாகர் அணை பூங்கா விளங்குகிறது.
பூங்காவின் உட்புறத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் சறுக்கி விளையாடுவதற்கு ஊஞ்சல்கள், பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் செயற்கை நீருற்றுகளும் அமைந்துள்ளது. மேலும் அழகிய கூடாரங்களும் உள்ளன. அணைப்பூங்காவில் உள்ள படகில் குடும்பத்துடன் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பண்ணாரி அம்மன் கோவில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு பவானி சாகர் பூங்காவிற்கு வந்து விடுகின்றனர். பூங்காவிற்குள் இருக்கும் நீருற்றுகளில் தண்ணீர் பீச்சியடிப்பதால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.
இங்கு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான பவானி சாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணையாகவும் திகழ்கிறது.
எப்படி செல்வது?
ஈரோடு மற்றும் கொடிவேரியிலிருந்து பேருந்துகள் மூலம் செல்லலாம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஈரோட்டில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
பண்ணாரி அம்மன் கோவில்.
கொடிவேரி அணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக