இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் அந்த ஆட்டினை முதலில் அங்குள்ளவர்கள் வினோதமாக பார்க்க தொடங்கினர். பின்னர் கேலிக்காக இப்படி செய்திருப்பார்கள் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.
ஆனால் ஏன் என்ற உண்மை தெரிய வந்தபோது அனைவரும் அதன்பின் தான் அதற்கான காரணத்தில் மிகப்பெரிய சோகம் மறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பிராங்க்ளின் வெட்ஸ் லைஃப்ஸ்டைல் பார்ம்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்கள். அதில் ரோஸ் என்ற செம்மறி ஆடு 3 குட்டிகளை பெற்றுள்ள நிலையில், அந்த 3 குட்டிகளை பெற்றதால் இந்த செம்மறி ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி பெரிதாக காணப்பட்டது.
பின்னர் அதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் அந்த கர்ப்பப்பை தரையில் உரசி செம்மறி ஆடு உயிரிழக்கும் நிலை ஏற்படும். என்பதால் இந்த விபரீதமான முடிவை தவிர்க்க பெண்கள் அணியும் ப்ராவை செம்மறி ஆட்டிற்கு போட்டுள்ளனர்.
மேலும் இதன் மூலம் கர்ப்பப்பை தரையில் உரசாமல் அது இறுக்கமாகவும், மேலே தூக்கி பிடிக்கும் என்ற நோக்கத்தில் தான் அணிந்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக