மூட்டுவலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை கொதிக்கவிட்டு ஆறிய பின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
சுக்கை தூளாக்கி எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகள் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் குணமாகும்.
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வாயில் புண் இருந்தால், வயிற்றிலும் புண் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கி குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து, வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.
பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் ஆகியவற்றை நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து
மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக