Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா?



பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வுதான் மாதவிடாய் என்பதாகும். ஆனால் இந்த இயற்கை நிகழ்வுக்காக அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் வலியை விட இந்த சமூகம் அவர்களை அந்த தருணத்தில் ஒதுக்கி வைப்பதுதான் அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்துகிறது.
பெண்களை தெய்வமாக வழிபடும் நமது சமூகத்தில் அவர்களின் மாதவிடாய் காலத்தை அசுத்தமானதாகவும், சங்கடமானதாகவும் கருதும் மூடநம்பிக்கை இன்றும் நமது சமூகத்தில் இருப்பது கேலிக்குரியது மட்டும்மல்ல வேதனைக்குரியதும் கூட. நமது மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் மாதவிடாய் பற்றிய தவறான புரிதலே உள்ளது, அதனால்தான் கடைகளில் நாப்கின்கள் வாங்கும்போது கூட அதனை இன்னும் மறைத்து வைத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த பதிவில் இந்தியாவில் மாதவிடாயால் பெண்களுக்கு விதிக்கப்படும் சில நியாயமற்ற தடைகளை பார்க்கலாம்.

இந்து மதத்தில் மாதவிடாய்
இந்து மத நம்பிக்கைகளின் படி மாதவிடாய் இருக்கும் பெண்கள் சாதாரண வாழ்க்கையில் பங்கேற்பது தடைசெய்யப்படுகிறது. ஒரு பெண் தன் குடும்பத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்பு "சுத்திகரிக்கப்பட வேண்டும்", இது மாதவிடாய் குறித்த எதிர்மறையான பார்வையாகக் கருதப்படுகிறது. இது இந்திரனின் 'பிரம்மஹத்யா' (பிராமண அரக்கன் வித்ராவைக் கொன்ற செயல்) மற்றும் பாவத்தைத் தணிப்பது பற்றிய புராணங்களில் ஒரு விளக்கத்தைப் பின்பற்றுகிறது.
இந்திரனின் பாவம்
மாதவிடாய் குறித்த பிரச்சினைகள் இந்திரனிடம் இருந்து தொடங்குகிறது. இந்திரனின் பாவத்தின் ஒரு பகுதி பெண்களால் எடுக்கப்பட்டது, இது மாதவிடாய் காலத்தில் செயல்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டது. எனவே மாதவிடாயில் இருக்கும் பெண் எந்த கடவுள் தொடர்பான சடங்குகளையும் செய்ய தடைவிதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மாதவிடாயில் இருக்கும் பெண்ணுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளப்படாமல் இருந்தது.
கொண்டாடப்படுவது பின்னாளில் விரட்டப்படுகிறது
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் முதல் மாதவிடாய் என்பது அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தென்னிந்தியாவிலும், அஸ்ஸாமி சமூகத்திலும், முதன்முறையாக மாதவிடாய் அனுபவிக்கும் சிறுமிகளுக்கு விழா எடுத்து பெரிய கொண்டாட்டமாக கொண்டாடப்படும். அதற்குபின் அவர்களுக்கு வரும் ஒவ்வொரு மாதவிடாய்க்கும் அவர்களுக்கு இரவில் வீட்டில் அனுமதியில்லை.
மாதவிடாய் இருக்கும் பெண்கள் அசுத்தமானவர்கள், சபிக்கப்பட்டவர்கள்
உண்மையில் நமது சமூகத்தில் பெரும்பாலனோர் இவ்வாறுதான் நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால் மாதவிடாயில் இருக்கும் பெண் ஒரு இயற்கை மற்றும் ஆரோக்கியமான உயிரியல் செயல்முறையை கடந்து செல்கிறாள். அவர்கள் வயிற்றில் ஒரு புதிய உயிரை கருத்தரிக்கக்கூடிய முட்டையை சிந்துகிறார்கள். இது இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரு முதிர்ந்த பெண்ணின் அடையாளம். அவர்களை அசுத்தமானவர்கள் அல்லது சபிக்கப்பட்டவர்கள் என்று அழைப்பது பிடிவாதம் மற்றும் மூடநம்பிக்கை ஆகும்.
மாதவிடாயில் இருக்கும் பெண் கோவிலுக்குள் நுழையக்கூடாது
கடந்த காலங்களில் மாதவிடாய் குறித்த அறிவியல் விளக்கங்கள் வராத நிலையில் அதனைக் குறித்து பல கட்டுக்கதைகளும், மூடநம்பிக்கைகளும் உருவானது. அதில் முக்கியமானது மாதவிடாயில் இருக்கும் பெண் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதாகும். மாதவிடாய் செய்யும் பெண் "தூய்மையற்றவர்" அல்ல, அவர்கள் உடலின் சாதாரண செயல்பாடுதான் இது. மாதவிடாயில் இருக்கும் பெண் கோவிலுக்குள் நுழைவது எந்தவிதத்திலும் கடவுளை கோபப்படுத்தாது.
மாதவிடாய் பெண் சமையலறைக்குள் நுழையக்கூடாது
அனைத்து நாட்களிலும் சமையலறையிலேயே பெரும்பாலும் இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சமையலறைக்குள் நுழையக்கூடாது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் சமையலறைக்குள் நுழைவதால் எதுவும் கெட்டுவிடாது. அவர்களால் மற்ற நாட்களை போலவே இந்த நாட்களிலும் சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். சமையலறையில் இருந்து அவர்களை வெளியேற்றுவது பாரபட்சமானது.
மாதவிடாய் இருக்கும் பெண்ணை யாரும் தொடக்கூடாது
இது மீண்டும் ஒரு பாரபட்சமான அணுகுமுறை. ஒரு மாதவிடாய் பெண்ணைத் தொடுவது உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. இயற்கையான ஹார்மோன் சுழற்சி வழியாக செல்வது எதிர்மறையான விஷயம் அல்ல. ஒரு பெண்ணை இப்படி நடத்துவது என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும், பெண்களும் அவர்களின் உடல் செயல்பாடுகளும் நிச்சயம் மதிக்கப்படவேண்டியவை.
மாதவிடாய் இரத்தம் மகத்துவமானது
மனித குலத்தின் அனைத்து இரத்தமும், ஏன் ஆண்களின் உடலில் இருக்கும் இரத்தம் கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்து தோன்றியதுதான். பண்டைய காலங்களில் மாதவிடாய் இரத்தம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. இது கடந்த காலத்தில் பல சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது, இன்றும் கூட விழாக்களில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பொருட்கள் மாதவிடாய் இரத்தத்தை பிரதிபலிப்பதுதான்.
மனித குலத்தின் அனைத்து இரத்தமும், ஏன் ஆண்களின் உடலில் இருக்கும் இரத்தம் கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்து தோன்றியதுதான். பண்டைய காலங்களில் மாதவிடாய் இரத்தம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. இது கடந்த காலத்தில் பல சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது, இன்றும் கூட விழாக்களில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பொருட்கள் மாதவிடாய் இரத்தத்தை பிரதிபலிப்பதுதான்.
சில ஆவணங்கள் மாதவிடாய் பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று கூறுகிறது, கடவுளுக்கு அவர்கள் அளிக்கும் பிரசாதம் அறையில் இருக்கும் மற்ற அனைவரின் பிரசாதங்களையும் மிஞ்சும் என்று கூறியது. கடந்த காலங்களில் மாதவிடாயில் இருந்த பெண்களை கோவிலை விட்டு விலக்கி வைக்க இதுவும் ஒரு காரணமாய் இருந்தது.
மேலும் கட்டுப்பாடுகள்
சில பெண்கள் மாதவிடாய் இருக்கும் போது தாவரங்கள் தண்ணீர் விடுவது அல்லது கணவர்கள் தூங்கும் அதே படுக்கையில் தூங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் உண்மை என்னவெனில் மாதவிடாயில் இருக்கும் பெண்கள் செடிக்கு தண்ணீர் விடுவதால் அது ஒன்று கருகி விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தப்படுவது
இன்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் தங்கள் இரவுகளை விலங்கு கொட்டகைகளிலோ அல்லது வீட்டிற்கு வெளியே கட்டப்பட்ட கொட்டகைகளிலோ கழிக்கின்றனர். இந்த தனிமைப்படுத்தும் நடைமுறை சாப்டி என்று அழைக்கப்பட்டது.
தனி பாத்திரங்கள்
இது நம்ப முடியாத உண்மையாகும். மாதவிடாய் காலக்கட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதற்கு என்றும், குடிப்பதற்கு என்றும் தனி பாத்திரங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் சுழற்சியின் போது அசுத்தமானவர்கள் என்று பல கலாச்சாரங்களால் பகிரப்பட்ட நம்பிக்கையில் இந்த நடைமுறை வேரூன்றியுள்ளது.
துளசி செடிக்கு பக்கத்தில் செல்லக்கூடாது
துளசி செடி இந்த மதத்தில் மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் துளசி செடியை தொட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த காலக்கட்டத்தில் அவர்களின் நிழல் கூட துளசி செடி மீது விழக்கூடாது. புராணங்களில் கூறியுள்ளபடி அவ்வாறு செய்தால் துளசி செடி இறந்து விடுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக