Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஜனவரி, 2020

அரச பதவி...!

 Image result for king"
தியமான் என்ற அரசன் ஒரு சிறிய நாட்டை ஆண்டு வந்தார். அந்த சமயத்தில் பெர்னாட்ஷா என்ற அறிஞன் ஒருவரும் அந்த நாட்டில் இருந்தார். அரசரின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றி குத்தலாகப் பேசுவது அவரது வழக்கமாக இருந்தது.

அரசரை பார்க்கும்போதெல்லாம் உனக்கென்னப்ப... நாட்டுக்கே நீ ராஜா. உனக்கு ஏதாவது கவலை இருக்கா... சொல்றதெல்லாம் செய்றதுக்கு வேலைக்காரங்க... அரண்மனை, சுகபோகங்கள், செல்வங்கள்... நீ நினைச்சு நடக்காத ஏதாவது ஒன்னு உண்டா? என்று கேட்பார். இதில் எரிச்சலான மன்னன், பெர்னாட்ஷாக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

அதற்காக தன் சேவகர்களை அவர் இருப்பிடத்திற்கு அனுப்பி, நீங்கள் ஒரு நாள் அரண்மனைக்கு வர வேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம். அரசன் அனுபவிக்கும் அனைத்து சுக போகங்களும் உங்களுக்கு உண்டு. சிம்மாசனம் உட்பட! என்று அழைப்பு விடுத்தான். பெர்னாட்ஷா அதற்கு ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட நாளில் பெர்னாட்ஷா அரண்மனைக்கு வந்தார். சொன்னபடியே ராஜ மரியாதைதான். மன்னருக்கான உடைகள் அணிவிக்கப்பட்டன. அரண்மனையில் அதியமானுக்கு சமமாக பெர்னாட்ஷா உட்காரவைக்கப்பட்டார்.

தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து பொங்கிப் போனார். தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். திடீரென மேலே பார்த்தார். தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது, எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருந்தது! குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக்கொண்டு இருந்தது.

அதை பார்த்த பிறகு பெர்னாட்ஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த நேரமும் தலை போய்விடும் என்ற சூழ்நிலையில் அவரால் உல்லாசமாகவும், உற்சாகமாகவும் இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு பெர்னாட்ஷாவுக்கு சாப்பிடவும் தோன்றவில்லை. மன்னன் எப்போதும்போல உற்சாகமாகவே இருந்தார். பெர்னாட்ஷா நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே இருந்தது! மன்னரிடம் பேசக்கூட முடியவில்லை.

எழுந்து ஓடலாம் என்று முடிவு செய்து அதற்கு தயாராகியும் விட்டார். ஆனால் அந்த முயற்சியில் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டு குதிரை முடி அறுந்துவிட்டால் என்ன செய்வது. உறைந்து போய் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

அதைப் பார்த்த அரசன், அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும். கண்ணுக்குத் தெரியாத ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழி இல்லை! அதை நான் தினந்தோறும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். அது எப்போதும் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

ஏதாவதோ யாராவதோ அதை அறுத்துவிடும் சூழல் எப்போதும் இருக்கிறது. சொல்லப்போனால் என் நண்பர்கள் கூட சில சமயம் என் மீது பொறாமை கொண்டு, என்னை கொல்ல முயற்சிப்பர் அல்லது சில சமயம் என்னை பற்றி தவறான கருத்துக்களை வதந்திகளை பரப்பி எனக்கெதிராக என் மக்களை திசை திருப்ப முயற்சிப்பர்.

அல்லது எதிரி திடீரென படையெடுத்து வரலாம். அல்லது என் வீழ்ச்சிக்கு நானே காரணமாகும் வகையில் நான் ஏதாவது தவறான முடிவு எடுக்கலாம். நீ தலைவனாக சிம்மாசனத்தில் உட்கார ஆசைப்பட்டால், நீ எதற்கும் தயாராக இருக்கவேண்டும். அதிகாரம் வரும்போதும் ஆபத்தும் கூடவரும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை தெரியாது என்றார்.

உடனே பெர்னாட்ஷா, இப்போது நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. உனது செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போது தான் புரிந்தது. என்னை வீட்டிற்கு போக அனுமதி கொடுங்கள்! என்றார்.

தத்துவம் :

ஒரு மிகப்பெரிய இலக்கை அடைவதைவிட அதை தக்க வைத்துகொள்வது தான் மிகவும் கஷ்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக