மொய்யாறு நதி, நீலகிரியிலிருந்து 15கி.மீ தொலைவிலும், ஊட்டியிலிருந்து 25கி.மீ தொலைவிலும், மசினக்குடியிலிருந்து 18கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய நதியாகும்.
சிறப்புகள் :
முதுமலை சரணாலயத்தையும், பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக மொய்யாறு நதி அமைகின்றது.
மசிங்குடி-ஊட்டி சாலையில் இருக்கும் மொய்யாறு நகரில் இருந்து உருவாகும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும்.
இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருகின்றன. அவற்றை காண்பதற்கு இது ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது.
மொய்யாறு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் மொய்யாறு நதி இடுக்குவழி இருபது கிலோமீட்டர் ஆழம் உடையது.
மொய்யாறு நதியில் தோண்டப்பட்டு உள்ள ஒரு பெரிய குழியின் வழியாக மொய்யாறு நதிநீர் வழிந்தோடுவது, மொய்யாறு அருவி உருவாக காரணமாக இருக்கிறது.
இந்த நதியின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடக்கூடிய பல சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.
முதுமலை தேசிய பூங்காவிற்கு உணவளிக்கும் முக்கிய நதியாக மொய்யாறு நதி திகழ்கின்றது.
அமைதியான இயற்கை காட்சிகளை காண விரும்புவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.
எப்படி செல்வது?
நீலகிரிக்கு ரயில் மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ செல்லலாம். நீலகிரியிலிருந்து கார் அல்லது வாடகை வாகனங்களின் மூலமாக சென்றால் வழிநெடுகிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் மலையின் அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடியும்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
நீலகிரி மற்றும் ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
பைக்காரா ஏரி...
காலாட்டி அருவி...
கபினி அணை...
தெப்பக்காடு யானை முகாம்...
பந்திப்பூர் வனவிலங்குகள் சரணாலயம்...
வயநாடு வனவிலங்குகள் சரணாலயம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக