Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?

 Image result for யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?"
 மாதுரு மூலதன யோகம் :

 ரண்டாம் வீட்டு அதிபதி, நான்காம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது.

 மாதுரு மூலதன யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

 களத்திர மூலதன யோகம் :

 இரண்டாம் வீட்டு அதிபதியை ஏழாம் வீட்டு அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் அமைகிறது.

 களத்திர மூலதன யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 வாழ்க்கை துணை வழியில் அதிக லாபங்கள் கிடைக்கும்.

 அங்கிஸ யோகம் :

 குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருப்பதால் உண்டாவது அங்கிஸ யோகம் ஆகும்.

 அங்கிஸ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 எல்லா செல்வங்களையும் பெற்று வசதியுடன் வாழ்வார்கள்.

 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

 வசீகர யோகம் :

 புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூவரும் கூடி நின்றால் உண்டாவது வசீகர யோகம் ஆகும்.

 வசீகர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 அழகான தோற்றம் உடையவர்கள்.

 வசீகர முகத்தோற்றம் உடையவர்கள்.

 சௌரிய யோகம் :

 லக்னதிலோ அல்லது லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சுப கிரகம் இருப்பது அல்லது தனாதிபதி வலுவாக இருப்பதால் உண்டாவது சௌரிய யோகம் ஆகும்.

 சௌரிய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 கீர்த்தி மற்றும் செல்வாக்குடன் வாழக்கூடியவர்கள்.

 உதாந்திரி யோகம் (சட்ட படிப்பு யோகம்) :

 லக்னத்திற்கு இரண்டாம், ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் லக்னத்தில் நிற்க உண்டாவது உதாந்திரி யோகம் ஆகும்.

 உதாந்திரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 விவாத துறையில் வல்லவராக விளங்குவார்கள்.

 மகிழ்ச்சியான குடும்பம் அமையப் பெற்று வாழ்வார்கள்.

 ஆன்மீக யோகம் :

 குருவும், சனியும் எவ்விதத்திலாவது சம்பந்தம் பெறுவது, அதாவது பார்வை அல்லது சேர்க்கை அல்லது பரிவர்த்தனை மூலம் இணைவது ஆன்மீக யோகம் ஆகும்.

 ஆன்மீக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 இறைநம்பிக்கை மிகுந்தவர்கள்.

 ஆன்மீக வாழ்க்கையை வாழ்பவர்கள்.

 இல்லற சந்நியாசி யோகம் :

 சனியின் வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சனி தன் இரு வீடுகளில் ஒரு வீட்டை பார்ப்பதால் உண்டாவது இல்லற சந்நியாசி யோகம் ஆகும்.

 இல்லற சந்நியாசி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 எதிலும் பற்று இல்லாமல் வாழ்வார்கள்.

 இல்லறத்தில் குறைந்த ஈடுபாடு இருக்கும்.

 புத ஆதித்ய யோகம் :

 ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து இருப்பதால் உருவாவது புத ஆதித்ய யோகம் ஆகும்.

 புத ஆதித்ய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 கல்வியில் நாட்டம் உடையவர்கள்.

 பூமி லாப யோகம் :

 நான்காம் வீட்டிற்கு உரியவன் லக்னத்திலோ அல்லது லக்னாதிபதி நான்காம் வீட்டின் இருப்பின் அல்லது நான்காம் வீட்டிற்கு உரியவன் பலம் பெற்று இருப்பின் உண்டாவது பூமி லாப யோகம் ஆகும்.

 பூமி லாப யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 நிலம், மனை, வீடு வாங்கும் யோகம் உடையவர்கள்.

 படுக்கை சுக யோகம் :

 பனிரெண்டாம் அதிபதி சுபர் சம்பந்தம் பெற்றிருந்தால் உண்டாவது படுக்கை சுக யோகம் உண்டாகும்.

 படுக்கை சுக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 நல்ல உறக்கம் உண்டாகும்.

 பந்து பூஜ்ய யோகம் :

 நான்காம் அதிபதி உச்சம் பெற்று அல்லது நட்பு பெற்று குரு பார்வை பெற்றிருக்க உண்டாவது பந்து பூஜ்ய யோகம் ஆகும்.

 பந்து பூஜ்ய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

உறவினர்கள் மூலம் ஆதரவு உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக