
வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில்
ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம்
செய்தனர்.அவர்களிருவரும் சட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளில் அவர்கள்
இருவருக்குமிடையில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு பின்னால் இருந்த நபர்
தண்ணீரை தன் மீது ஊற்றிக்கொண்டு பைக் ஓட்டியவர் மீதும் ஊற்றிக்கொண்டும் சென்றார்.
பின்னர் அவர்கள் தங்களுக்குத் தாங்களே
சோப்பு போட்டு கொண்டனர். அவர்கள் இப்படி பைக்கில் பயணம் செய்த வரை குளித்துக்
கொண்டுபோனதை பலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக தளத்தில் வெளியிட்டனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
Bia đắng
lắm 😇😇
பைக்கில் பயணம் செய்து கொண்டே பயணம்
செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குளியல் வீடியோவை பார்த்த போலீசார் அந்த
வீடியோ அடிப்படையாக கொண்டு பைக்கின் எண்ணை வைத்து விசாரித்துள்ளார்.
பின்னர் போக்குவரத்து விதியை
மீறியதற்காக பைக் ஓட்டிச் சென்ற ஹீய்ன்தன் கானுக்கும் , அவருக்கும் பின்னால்
அமர்ந்து வந்த மற்றோருவருக்கும் தலா 80 டாலர் அதாவது (ரூ .5,200)
அபராதம் விதித்தனர். மேலும் ஓட்டுநர் உரிமம் பெறாத ஹீய்ன்தன் கானுக்கு பைக்
வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக