Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜனவரி, 2020

காணாமல் போன இளம்பெண்களை தேடி தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்!அலமாரிக்குள் திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சம்பவம்!

காணாமல் போன இளம்பெண்களை தேடி தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்!அலமாரிக்குள் திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சம்பவம்!


கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடான உக்ரேனியாவில் மரியா காமினினா என்ற 19 வயதுடைய இளம்பெண்ணும் எவெலினா லிசென்கோ என்ற 16 வயதுடைய இளம்பெண்ணும் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் சென்றுள்ளனர்.

இவர்களின் பெற்றோர் என்று சென்று தேடினாலும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றிருந்த இருவரும் வாடகைக்கு தங்கிருந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.அப்போது அலமாரியை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த அலமாரிக்குள் இருந்த மூட்டைக்குள் கட்டிவைக்கப்பட்ட உடல் அழுகிய நிலையில் இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இருவரின் உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர்த்து வைத்து டேப்பின் மூலம் உடல் முழுவதும் சுற்றிவைக்கப்பட்டிருந்துள்ளது.

இருவரின் கைகளிலும் கைவிலங்கு போடப்பட்டிருந்துள்ளது.இருவரின் உடல் முழுவதும் கத்தி குத்து காயங்கள் இருந்தமையால் கொள்ளைக்கும்பலால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேமடைவதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாக கொலை செய்து கொள்ளை அடிக்கும் ஒரு தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக