Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 ஜனவரி, 2020

காட்டுத் தீயை அணைக்க களமிறங்கும் கிரிக்கெட் வீரர்கள்..

ஸ்திரேலியாவில் எரிந்துவரும் காட்டுத் தீயை அணைப்பதற்கும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த காட்டுத் தீயில் இதுவரை 18 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் காட்டுத்தீயை அணைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் ஒவ்வொறு விக்கெட்டுக்கும் 50 ஆயிரம் வழங்கப்படுமென ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஆஸ்திரேலிய வீரர்கள் பீட்டர் சிடில், கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் பிக் பேஷ் லீக்கில் தாங்கள் வீழ்த்தும் விக்கெட்டுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். இதே போல் மற்ற வீரர்களும் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக